வேகத்தில் விவேகம் வீழ்ந்துவிடக்கூடாது! posted byமுஹம்மது ஆதம் சுல்தான் (yanbu)[17 April 2015] IP: 37.*.*.* Romania | Comment Reference Number: 40193
ஊருக்கு நன்மையான இந்த பயோ காஸ் திட்டம் வரவேண்டும், அதுவும் சீக்கிரம் வந்திடாதா என்ற ஆவலுடனும், அபிலாசையுடனும் எதிர்பார்க்கிறோம்! எப்பிரிவினர்களின் முயற்சியாலும் முழுமை அடையவேண்டும் என்பதில் இரு கருத்துக்கள் ஏதுமில்லை என்பதே இந் நலத்திட்டத்தை நாடும் நடுநிலையானவர்களின் எண்ணமோட்டமாகும்!
அதே நேரத்தில் இத்திட்டத்தை முறைப்படி அணுகி, இதன் செயல்பாடுகளில் எதிர்காலத்தில் எந்தவித சட்ட சிக்கலோ,அரசாணையின் அத்து மீறலோ இல்லாமல் இருக்கிறதா என்பதை தீர்க்கமாக தெளிவு பெற்றிடவேண்டும்!
இத்திட்டம் இந்த இடத்தில் வருவதை எதிர்ப்பவர்களை எப்படியாவது வென்றிடவேண்டும் என்ற அவசர கோலத்தில் அரைகுறையாக அந்த அதிகாரி வாக்குறுதி தந்துவிட்டார், இந்த வழியை பின்பற்றி செல்லலாம் என்று,எந்த ஒரு சட்ட சிக்கலோ ,அரசு விதி மீறலோ இருந்தாலும் அதை அலட்சியம் செய்து விட்டு காரியமாற்றி முடிவில் அவை அனைத்திற்கும் ஒரு அவலம் வருமேயானால், முட்டிவிட்டு குனிந்த கதையாகிவிடும்!
இது 90 இலட்சம் திட்டமாட்சே ஆகவே எந்த ஒரு ஆணையரும் இதில் கடுமை காட்டாமல் விட்டுவிடுவார்கள் என்று எதிர்பார்த்தால், அது இலவு காத்த கிளிக்கு இலவம் பஞ்சு கிடைத்த கதையாகிவிடும்!
ஏனெனில் சென்னையில் 47 கோடிக்குறிய திட்டத்தையே சாலை வசதி சரி இல்லை என்று பசுமை தீர்ப்பாணையம் தடைவிதித்திருக்கும் போது, அத்திட்டத்துடன் ஒப்பிடுகையில் நம் திட்டம் மிக,மிக சிறிய திட்டமாகும். ஆனால் நம்மை பொறுத்தவரை நமக்கு நன்மை பயக்கக்கூடிய ஒரு கனவு திட்டமாகும். அத்திட்டத்தை முறைப்படி எந்த சட்ட சிக்கலோ ,அரசு விதி அத்து மீறலோ இல்லை என்பதை தெளிவாக தீர்க்கமாக அறிந்த பிறகு ஆக்கப்பூர்வமான பணிகளில் இறங்குவதே சாலச்சிறந்தது!
அதை விட்டுவிட்டு எம்முடைய எதிரியை வீழ்த்த வேண்டும் என்ற வெறியுடனும், ஆத்திரத்துடனும் அவசர கோலத்தில் அரைகுறை தகவல்களுடன் அள்ளித்தெளிக்கும் காரியங்களில் ஈடுபடுவோமேயானால், ஒரு திட்டத்தை எப்படி செயலாக்க வேண்டும் என்ற அணுகுமுறை தெரியாத அனுபவசாலிகள் என்று நம் அறியாமையை அடுத்தவர்கள் பார்த்து எள்ளி நகையாடக்கூடிய நிலைமைக்கு நாம் தள்ளப்படுவதோடு மட்டுமல்லாமல், ஒரு அரிய பெரிய அழகான திட்டம் நம் கையைவிட்டு கழன்றோடிவிடும் என்பதும் திண்ணமே!
அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross