நமதூரில் CRZ-1 பகுதியா? அப்படி CRZ-1 பகுதியாக இருந்தால், எந்தெந்த பகுதிகள் (தெருக்கள்) அதில் அடங்கும்?. posted byசாளை.அப்துல் ரஸ்ஸாக் லுக்மான் (அபூதாபி)[18 April 2015] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 40199
இந்த இணையதளம், கடந்த இரண்டு வருடங்களாக CRZ பற்றியும், சர்வே எண் 278-ல் வரும் பயோ கேஸ் திட்டம் பற்றியும் பல கட்டுரைகள் எழுதியுள்ளது. மீண்டும் மீண்டும் ஒரே அந்த தலைப்பாகவே இருப்பதால், என்னைப் போல் சிலர் சலிப்பு தட்டி அதை முழுமையாக படிக்காமல் இருந்திருப்போம்.
இதற்கிடையில், “அறியாமையா? அசட்டுத் துணிச்சலா?” (News ID # 15727) என்ற தலைப்பில் கற்புடையார் பள்ளி வட்டம் (சிங்கித்துறையில்) மீனவர்களுக்கு என - சுனாமி தொடர்பான திட்டமாக, 169 தொகுப்பு வீடுகள் பற்றியும், // காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை, இந்தத் திட்டம் குறித்து எதிர்ப்புக் குரல் கொடுக்கத் துவங்கியது. இத்திட்டத்தை எதிர்க்க பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், இந்தத் திட்டத்திற்கு என அரசு கையகப்படுத்திய நிலம் - CRZ வரைமுறைக்குள் வருகிறது என்பதுதான் வெளிப்படையாகக் கூறப்பட்ட காரணம்.// (C&P).
ஒரு விஷயம் “மக்களுக்கு” தகவலாக சென்றடைந்துவிட்டது. அதாவது, சுனாமி குடியிருப்புக்கு தடை கொடுக்கப்பட்ட காரணம் , அந்த பகுதி CRZ வரையறைக்குள் வருகிறது. அதே போல் தமிழக அரசின் கீழ் செயல்படுத்த இருக்கும் ‘பயோ கேஸ் திட்டமும்’ அந்த வரையறைக்குள் வருவதால், இத்திட்டத்தை நிறைவேற்ற அதிகாரிகள் எப்படி முயற்சி செய்கிறார்கள்? என்று.
என் போன்றோரின் கேள்வி (விபரம் அறிய தான்), நமதூர், CRZ-ல் எந்த zone-ல் வருகிறது (1,2 3)? அந்த ZONE-ல் எந்தெந்த பகுதிகள் வரும்?
கற்புடையார் பள்ளி வட்டம் (சிங்கித்துறை), கடையக்குடி (கொம்புதுறை) போன்ற பகுதிகள் மட்டும் தான் அந்த CRZ- பகுதியில் வருமா? அல்லது, கொச்சியார் தெரு, சொளுக்கார் தெரு, தீவுத் தெரு, மங்களவாடி, மரைக்கார்பள்ளி தெரு போன்ற பகுதிகளும் வருமா?
அப்படி (ஒருகால்) இந்த பகுதிகெல்லாம் CRZ வரையறைக்குள் வந்தால், என்னென்ன பிரச்சனை வரும்?
1) ஏற்கனவே இருக்கும் வீடுகளுக்கு பிரச்சனை வருமா?
2) இருக்கும் வீட்டை இடித்து விட்டு, புதியதாக அதே இடத்தில் வீடு கட்டினால், பிளான் அப்ரூவலில் பிரச்சனை வருமா?
3) காலி நிலத்தில் வீடு கட்டும் போது பிளான் அப்ரூவலில் பிரச்சனை வருமா?
4) அந்த தெருக்களில் ஏற்கனவே இருக்கும் ரோட்டை புதிப்பித்து போட்டால் பிச்சனை வருமா?
5) புதியதாக சாலை போட பிரச்சனை வருமா?
இந்த சந்தேகங்களை, இந்த இணையதளம் தனி செய்தியாக தந்தாலோ , அல்லது விபரம் அறிந்தவர்கள் கருத்து பதிந்தாலோ, சட்டத்தை அறிவதற்கு இலகுவாக இருக்கும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross