விளங்கி கருத்து பதியுங்கள் சகோதரரே! posted byசாளை.அப்துல் ரஸ்ஸாக் லுக்மான் (அபூதாபி)[18 April 2015] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 40213
அய்யோ அய்யோ, தம்பிக்கு தமிழ் வாசிக்க தெரியும் தானே? வாசிக்கிறது தான் வாசிக்கிறீங்க. ஒழுங்கா வாசிக்க கூடாதா?
தம்பி முத்து இஸ்மாயீல் உடைய கருத்து பதிவை காப்பி & பேஸ்ட் பண்ணியதை கூட ஒழுங்காக வாசிக்காமல், அந்த வாசகம் என்னுடையது என்று 'கோயபல்ஸ்' மாதிரி மீண்டும் பொய் சொல்கிறீர்களே?
//காயல்பட்டினம் நகராட்சியின் மூலம் காயல்பட்டினம் தென்பாகம் சர்வே எண் 278 ல் அமையவிருக்கும் CRZ வரைமுறைக்குள் வராத எரிவாய்வு மையம் மற்றும் குப்பை கிடங்கிற்கு செல்லும் CRZ வரைமுறைக்குள் வரும் சாலை குறித்து நமது நகராட்சி என்ன முடிவு எடுத்துள்ளது..? எடுக்க போகிறது..? மக்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பாகவும் / குழப்பமாகவும் / இருவேறு கருத்தாகவும் உள்ளது..// (C&P) Comment Reference Number: 40183
தம்பி முத்து இஸ்மாயீல் உடைய வாசகம். அவர் ஒத்துக் கொண்டு இருக்கிறார் என்பதை அவரின் பதிவை மேற்கோள் காட்டி இருந்தேன்.
யார் என்ன கருத்து பதிந்திருக்கிறார் என்று படிப்பதில்லையா? ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொல்லி உண்மைபடுத்தி விடலாம் என்று பார்க்கிறீர்கள்.
//நான் அடித்துச் சொல்கிறேன்: முன்னாள் நகர்மன்றத் தலைவர் வழங்கிய 5.5 ஏக்கர் நிலம் - நிலத்தின் பெரும் பகுதி CRZ - 1 வரைமுறைக்குள் வருகிறது.// (C&P) இது உங்களின் கருத்து. இதையும் என்னுடைய கருத்து என்று திரித்து சொல்லி விடாதீர்கள்.
//உயிரி வாயு மின் திட்டத்திற்கான நன்கொடை இடத்தை பொது மக்கள் போய் பார்ப்பதற்கு மெகா அமைப்பினர் ஊர்தி வசதி ஏற்பாடு செய்தால் உண்மை நிலவரம் அனைவருக்கும் தெரிய வரும்.// (C&P) தம்பி சாளை பஷீர் அவர்களின் கருத்து.Comment Reference Number: 38767. தம்பி பஷீர் பதிந்தது ஜனவரி மாதம். அவரும் மெகா அமைப்பின் உறுப்பினர் தான்.
இப்போது ஜோராக வேலை நடைபெறுகிறது. திட்டம் நடைபெறும் இடத்தை அதிமுகவின் அங்கத்தினர் பார்த்து வந்துள்ளனர். முடிஞ்சா தலைவி மற்றும் ஏன் என்றே தெரியாமல் / அறியாமல் எதிர்க்கும் நண்பன் உறுப்பினர் சம்சுதீன் அவர்களையும் அந்த இடத்துக்கு போய் பார்க்க சொல்லுங்கள்.
இப்போதாவது மக்களுக்கு வேலை நடைபெறும் இடத்துக்கு மக்களை அழைத்து சென்று, இந்த திட்டம், (உங்களின் கருத்து படி) எந்த வகையில் சட்டத்துக்கு புறம்பாக நடைபெறுகிறது? என்று காட்டினால், "ஏமாந்தது போதும் மக்களே...!" என்ற உங்களின் கோஷத்துக்கு (MEGA 03-01-2015 நோட்டிஸ்) ஆதரவாக மக்களும் உங்களுடன் சேர்ந்து போராடுவார்கள்.
//http://kayalpatnam.com/shownews.asp?id=15744
இப்போது சொல்லுங்கள் யார் பொய் சொல்கிறார்கள், நீங்களா, நானா? //
(உங்களின் கருத்து) உங்களிடம் கருத்து பதியும் பொது மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியதுள்ளது. வேறொருவரின் கருத்தை காப்பி பேஸ்ட் பண்ணினாலும் என் கருத்து என்று தவறாக புரிந்து, என் மேல் இட்டுக் கட்டி விடுகிறீர்கள்.
என் கருத்து பதிவுக்கும், நீங்கள் மேற்கோள் காட்டும் செய்திக்கும் என்ன தொடர்பு? நான் இந்த செய்திக்கு கருத்து பதிந்து இருக்கிறேனா? இருந்தால் அதையும் காட்டுங்கள்.
//இப்போதைய குற்றச்சாட்டு, “அந்த இடத்துக்கு போவதற்கான பாதை, CRZ-ல் வருகிறது என்பதாகும்” ஒரு திட்டம் வரும்போது சட்ட சிக்கல் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அதிகாரிகளின் கடமை. மாவட்ட ஆட்சியரின் கண்காணிப்பில் இந்த திட்டம் நடைபெருகிறது. அவர்கள் சட்டத்துக்கு உட்பட்டு, தமிழக அரசின் இத்திட்டத்தை செயல்படுத்துவார்கள். சட்ட சிக்கலில் மாட்டி, இந்த திட்டம் முடங்கி போகாமல் பார்த்துக் கொள்வார்கள் என்று நம்புவோம். // என்ற என் கருத்தை காப்பி & பேஸ்ட் பண்ணுகிறேன்.
சரி சரி, CRZ பற்றி இவ்வளவு தெளிவாக இருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.
நீங்கள் குற்றச்சாட்டு சொல்லும், //கற்புடையார் பள்ளி வட்டம் (சிங்கித்துறை), கடையக்குடி (கொம்புதுறை) போன்ற பகுதிகள் மட்டும் தான் அந்த CRZ- பகுதியில் வருமா? அல்லது, கொச்சியார் தெரு, சொளுக்கார் தெரு, தீவுத் தெரு, மங்களவாடி, மரைக்கார்பள்ளி தெரு போன்ற பகுதிகளும் வருமா?// என்ற எனது கருத்துக்கும் (Comment Reference Number: 40199) பதில் கொடுப்பீர்கள் என்று எதிர்பார்த்தேன். அந்த department உங்களுடையது இல்லையா? இதில் இன்னும் expert ஆகவில்லையோ?
Expert பதில் சொல்லுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross