அனற்பாலையில் உணர்பாளையாய் மலர்ந்து
தினம் தினம் மனம் தீக்குளிக்க கசையடியாய்
தாக்கிய வசைகளை வித்தகன்விசைப்படி வசமாக்கி
இசைந்து ஏற்று மாற்றுவிசைதந்து மகத்துவமாக்கி
நமதுகுமுதமலர் கோமான் ஓதும் மறைஒலிகேட்டு
ஓங்கிவந்தவாளும்வீழ அமிலமொழியும்அமுதமாக
உதிர்க்கும்மொழியும் உன்னதமொழியாகி உறைவிடமாக
இடமிருந்து வலம்வரச்செய்து தடம்பதிக்க (ஆதாரமாக)
இறக்கிவைத்தான் இறைவன்தன் இன்பமறையிலும்
இவ்வுயர்வை தனி ஒருமனிதர்பெற தந்துவிட்ட தரணிபாடும்
பூமான் நபியவர்களின் பொன்மொழிகள் பொழியும்
தாஹா நபியவர்களின் புகழ்பாடும் எம்மாமன்றம்
புனிதமஜ்லிஸ் புகாரிஷ் ஷரீஃப் 1436 ஆண்டின் அனைத்து நிகழ்வுகளும் நனிசிறப்புடன் அரும்பயன்தர தொடர்ந்து உலகநிறைவு நாள்வரை பயன்பெறும் பண்போடும் பொளிவோடும் பொழியட்டும் இன்ஷா நாலைமறுமையில் நற்சாட்சிபகரும் நற்கூடமாக ஒளிரட்டும் நாயன் அருள் பொழியட்டும் ஆமீன்
புதிய நிர்வாக அங்கம்கொண்டோர் இதுவரை அங்கம்வகித்த அனைவருக்கும் எமது உலம்கனிந்த நல்வாழ்த்துக்கள் உங்கள் வாழ்வில் எல்லா நலவளங்களும் பெற்று செம்மையோடும் பசுமைமாறாத செழிப்போடும் செயலாக்கம்தர வல்ல அல்லாஹ் போதுமானவன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross