என்றென்றும் இன்புற்றிருக்கவேண்டும் இத்ரிஸ் அவர்கள் இறைவன் துணை யுடன்! posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu)[21 April 2015] IP: 128.*.*.* Romania | Comment Reference Number: 40237
டாக்டர் நீங்கள் உங்களிடம் வரும் நோயாளிக்கு சிகச்சை
அளிக்கின்றீர்களோ இல்லையோ அந்த நோயாளியுடன் நவரசமாக பேசி அவரின் வேதனையை ஒன்றும் இல்லாதமாதிரியாக்கும் "மாயாஜாலம்" மிகுந்த நகைச்சுவையை ரசிக்க ஆவலாக இருக்கிறோம்!
மருமகன் SK சாலிஹே, சிறிதளவுகூட சந்தேகம் வேண்டாம், டாக்டர் ஊரில் இருந்தால், தன்னைத்தேடி வருபவரது நேரமானது வானுறக்கம் கொண்டிருந்தாலும், தானுறக்கத்தை துச்சமென தூக்கியெறிந்து ஓடோடி வந்திடும் உத்தம குணத்திற்கு சொந்தக்காரர். 35 வருடத்திற்கு மேலாக அவரைப்பற்றியும், அவர்ருடைய மேன்மை பொருந்திய குடும்பத்தைப்பற்ற்யும் தெரிந்தவன், அறிந்தவன், உணர்ந்தவன் என்ற உரிமையில்
இதை எழுதுகிறேன்! .
நேற்று இரவு கூட அவரின் சௌதி பிரிவு நிகழ்வை பற்றி சற்று சோகம் நிறைந்த சாதாரண சிரிப்பில்லாத விசியமாக பேசிமுடிக்கும் வேலையில் அவருக்கே உண்டான இயல்பான மனோபாவத்தில் ஒருவரின் பெயரைக்கூறி அவர் உங்களை பார்த்துக்கொள்வார் அவர் துணை இருக்க உங்களுக்கு எந்த கவலையும் இல்லை என்று ஒரு வடிவேல், செந்தில் போன்ற சுபாபமுள்ளவரை மேற்கோள்காட்டி பேச்சை முடித்தாரே பார்க்கலாம்! நானும் என் இல்லாளும் விழுந்து விழுந்து சிரித்தோம்!
1982 அல்லது 83 என்று நினைக்கின்றேன் டாக்டர் முதன் முதலில் என்னுடன்தான் புனித ஹஜ் பயணம்
மேற்க்கொண்டார்கள்.தமாமிலிருந்து ரியாதிலுள்ள என்வீட்டிற்கு வந்திறங்கிய டாக்டர் அவர்கள் துணிமணிகளோடு பல பெரிய அட்டைப்பெட்டிகளையும் இறக்கினார்கள்,டாக்டர் நாம் ஊருக்கு பயணம் போகவில்லை ஹஜ்ஜுக்குத்தான் போகிறோம் ஏன் இத்தனை அட்டைப்பெட்டிகள் என்றேன், டாக்டர் சொன்னார், எனக்கும் தெரியும் நாம் பயணம் போகவில்லை ஹஜ்ஜுக்குத்தான் போகிறோம். ஹஜ்ஜுக்கு வருபவர்கள் அவதியுற்று பயணமாகிவிடாம சற்று பிடித்து இழுக்க உதவும் கருவிகள் அனைத்தும் அடங்கிய அட்டைப்பெட்டிதான் இது என்று திறந்து காட்டினார்கள். அத்தனையும் மாத்திரைகளும் மருந்துகளும் நிறைந்திருந்தன. "புனிதமினா" கூடாரத்தில் 24 மணிநேர கிளினிக்கையே நடத்தி முடித்தார்கள்! நல்லிதையத்தை என்றும் சுமந்து வாழும் இதிரிஸ் அவர்கள்!
டாக்டர் அவர்கள் என்றென்றும் எல்லா நலனும், வளமும் பெற்று வனப்புடன் வாழ வல்ல அல்லாஹ்வை வேண்டுகிறான்! அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross