Re:... posted byதமிழன் முத்து இஸ்மாயில். (kayalpattinam)[29 April 2015] IP: 180.*.*.* India | Comment Reference Number: 40264
ஆற்றுக்கு அருகில் உள்ள சுற்று வட்டார மக்களுக்கு குடிக்க நீர் இல்லை... DCW இரசாயன தொழிற்சாலைக்கு 1000 லிட்டர் குடிநீர் 50 பைசாவா..! என்ன கொடுமை இது..!
இரசாயன தொழிற்சாலை பயன்பாட்டிற்கு இங்குள்ள விவாசய நீரை / குடி நீரை எடுப்பது வேதனை அளிக்கிறது - இரசாயன தொழிற்சாலை பயன்பாட்டிற்கு நீர் வேண்டும் என்றால் கடல்நீரை சுத்தரிப்பு செய்து எடுத்துக்கொள்ளட்டும் - வெளிநாடுகளில் உள்ள அணைத்து தொழிற்சாலைகளும் கடல்நீரை சுத்தரிப்பு செய்து நீர் தேவையை பயன்படுத்துகிறார்கள்.
தமிழக மக்களிடையே இது குறித்த தெளிவும் / விழிப்புணர்வும் இல்லாதவரை இந்த நாட்டையும் / இந்த நாட்டின் விவாசய மக்களையும் வறுமைக்கு உள்ளாக்கி நாட்டின் நிலங்களை வறண்ட பூமியாக விரைவில் இந்த DCW மற்றும் பல வட நாட்டு தொழிலதிபர்கள் ஆக்கிவிடுவார்கள்.
ஆத்தூரில் இருந்து நம் நகருக்குள் வரும் நீர் அளவை கணக்கிடும் மீட்டர் (கணக்கீடு) குறித்த தெளிவு / விழிப்புணர்வு நமது நகர் மக்களுக்கிடையில் இல்லை என்பதை நமது நகராட்சி அதிகாரிகளும் / இரசாயன தொழிற்சாலையும் மக்களால் தேர்ந்துடுக்கப்பட்ட பிரதிநிதிகள் உட்பட நன்கு உணர்ந்து / தெரிந்து வைத்து இருக்கிறார்கள்.
நகருக்கு புறத்தில் பொருத்தப்பட்டு இருக்கும் நீர் கணக்கீடு (மீட்டர் அளவு) குறித்த தினசரி நீர் RECIVED / DELIVERY அறிக்கை மாதம் தோறும் நமது நகராட்சியில் கேட்டு பெற்று ஆய்வு செய்தால் மேலும் பல திடுக்கிடும் முறைகேடுகள் அம்பலமாகும்..! ஆத்தூரிலிருந்து நகருக்குள் வரும் நீரின் RECIVED / DELIVERY அறிக்கை பெற நகராட்சியில் தண்ணீர் வரி செலுத்தும் நம் அனைவருக்கும் பொறுப்பு / கடமை உள்ளது. அதையும் இந்த இணைதளம் தான் அறிக்கை பெற்று நமது பார்வைக்கு தரவேண்டும் என எதிர்ப்பார்ப்பது சரியல்ல..! நமக்கான தேவைக்கு நாமும் பங்குகொள்ள வேண்டும் என்பதே எனது ஆவல்.
நகர்நலன் குறித்த பல தகவலை தன்னால் இயன்ற வரை இந்த இணையதளம் அளித்து வருகிறது - பாராட்டுக்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross