வாழ்வில் வசந்தம் posted byN.S.E. மஹ்மூது (Kayalpatnam)[19 April 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 4028
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
அன்பு மாணவ மணிகளே!
பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை அறிவதற்காக எல்லோரும் ஆவலாக காத்திருக்கிறீர்கள், இன்ஷா அல்லாஹ்!
மே 14 ம் தேதி பிளஸ் 2 மற்றும் மே 25 ம் தேதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்திருப்பதாக செய்தி தாள்களிலே வெளியாகி இருக்கிறது. அனைத்து மாணவ மணிகளும் எல்லா பாடங்களிலும் அதிக மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சிப்பெற வாழ்த்துக்கள்.
---------------------
பத்தாம் வகுப்பு :-
பத்தாம் வகுப்பு மாணவ மணிகளுக்கு இன்னும் பள்ளிக்கூட வாழ்க்கை முடிவடையவில்லை, மேலும் பிளஸ் 1க்கு போக இருக்கிற உங்களுக்கு டென்ஷன் இருக்காது.
அதனால் நீங்கள் இந்த விடுமுறையில் நன்றாக ஓய்வு எடுக்கலாம் அடுத்த விடுமுறையில் பல பேருக்கு ஓய்வு எடுக்க வாய்ப்புக் கிடைக்காது. எனவே நன்றாக ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டியது.
---------------------------------------------
மாணவிகள் :-
நன்றாக ஓய்வு எடுப்பதுடன் ஓரளவு சமையல் கலையை கற்றுக்கொள்ளுங்கள், என்னதான் நாங்கள் (ஆண்கள்) " பிரியாணி " ஆக்குவதிலிருந்து " காயம் மருந்து " செய்வது வரை எந்த சமையலை நன்றாக செய்தாலும் நீங்கள் (வளையல் கரங்கள்) செய்கின்ற சமையலுக்கு ஈடாகாது, அது ரசமானாலும் அல்லது கொத்தமல்லி சட்டினியானாலும் சரி அதன் ருசியே தனிதான்.
எனவே சமையல் கலை என்பது இறைவனால் பெண்களுக்கு வழங்கப்பட்ட அருட்கொடை. எனவே அந்த அருட்கொடையை அவமதிக்கலாகாது.
--------------------------
பிளஸ் 2 :-
பள்ளி செல்லத் தொடங்கிய காலம் முதல் பிளஸ் 2 படித்து முடியும்வரை பெற்றோர்களின் முழுக்கட்டுபாட்டில் வாழ்ந்த உங்களுக்கு இனி வரும் காலத்தை ஓரளவு உங்களுடைய சுயக்கட்டுபாட்டில் அமைக்க வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.
பள்ளி படிப்பு முடிந்து சுதந்திரமாக இருக்கும் இந்த நேரத்தில் சில வாரங்கள் நன்றாக ஓய்வு எடுத்தபின் கல்லூரியில் சேர்வதற்கான வேலைகளை ஆரம்பம் செய்யுங்கள்.
தீர ஆலோசித்து ஒரு நல்ல முடிவு எடுத்து உங்கள் வருங்காலத்திற்கான திட்டங்களைத் துவக்குங்கள் அல்லாஹ்! நன்மையாக்கித் தருவான்.
--------------------------------------
மாணவிகள் :-
பள்ளிக்கூட வாழ்க்கை முடிந்து விட்டது இனிமேல் என்ன செய்யலாம் - மதரஸா சென்று மார்க்கக் கல்வியைப் படிப்பதா ? அல்லது கல்லூரிக்கு செல்வதா? எதுவாக இருந்தாலும் தேர்வு முடிவுகள் வரும் முன்பே திட்டமிட்டுக்கொண்டால் அதற்கான ஆயத்தங்களை செய்ய உதவியாக இருக்கும்.
என்னைப் பொறுத்தவரை நீங்கள் மதரஸாவிற்கு சென்று மார்க்கக் கல்வியை பயின்று அதன்படி நடந்தால் ஈருலுகப் பயனும் கிடைக்கும்.
இல்லை நீங்கள் கல்லூரிக்கு சென்று ஏதாவது ஒரு பட்டம் வாங்கத்தான் வேண்டும் என்ற நிலையில் இருப்பவர்களாக இருந்தால், நமது ஊரில் உள்ள கல்லூரிக்கு சென்று படித்து இளநிலை பட்டம் வாங்கிக் கொள்ளலாம். எக்காரணம் கொண்டும் வெளி ஊருக்கு சென்று படிக்காதீர்கள் அது நமக்கு பக்கத்து ஊரேயானாலும் சரி அது நல்லதல்ல.
சீனா போன்ற தூர பிரதேசமாகிலும் சென்று சீர் கல்வியை கற்க வேண்டும் என்று நமது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் சொன்னது மார்க்கக் கல்வியைத்தான், அதனால் உலகக் கல்விக்காக பெண் பிள்ளைகளே வெளியே செல்ல வேண்டாம்.
உங்களிலே எத்தனை பேர் ஐந்து வேளையும் சரியான நேரத்திற்கு தொழுது வருகிறீர்கள்? என்பதை நீங்களே சுயமாக சிந்தித்துப் பாருங்கள்!!!
எல்லாம் வல்ல அல்லாஹ்! நீங்கள் அனைவரும் அதிக மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெறவும், சீரான கல்வியைக் கற்று உங்கள் வாழ்வில் வசந்தம் வீசவும் கிருபை செய்வானாக ஆமீன். வஸ்ஸலாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross