செலுத்தும் வரி பணத்திற்கு கேள்வி கேட்க தொடக்கி விட்டார்கள்.. என்பதாலேயே பிரச்சனை ஆரம்பம்.. posted byதமிழன் முத்து இஸ்மாயில். (kayalpattinam)[02 May 2015] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 40348
அந்த மனுஷன் (வாவு அப்துர்ரஹ்மான் ஹாஜியார்) அவருடைய எடத்த பெரியமனசு வச்சி கொடுத்த மாதிரி... நீங்க எல்லாரும் ஒன்னு சேர்ந்து... காசு போட்டு... CRZ Zone குள்ள வராமே ரோட்டுக்கு இடம் வாங்கி நகராட்சிக்கி அர்பனிச்சி... பயோ கேஸ் திட்டத்த கொண்டு வாங்கப்பா பாப்போம்.... CP
சகோதரர்..சேக் தாவூத் அவர்களே..! நகருக்கு வரும் அரசு திட்டத்திற்கு நகரில் எவரும் பெரியமனசு வச்சி நகராட்சிக்கு நிலம் அளிக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலை நமது நகராட்சிக்கு ஏற்படவில்லை - அதாவது நகராட்சிக்கு என சொந்தமான நில / புலன்கள் நகரில் பல பகுதிகளில் ரோடு வசதியோடு பல ஏக்கர் இடம் இருக்கின்றன - அதில் குறிப்பிட்டு சொல்லும் படியாக சர்வே எண் 392 / 5 மர்ஹூம் MKT அப்பா காலதில் குப்பை கொட்டுவதற்காகவே ஒதுக்கிய நிலம் மற்றும் நகரில் ஊருக்கு ஒதுக்குபுறமான இடங்கள் பல உண்டு - அதையெல்லாம் புறம் தள்ளி விட்டு ஒரு தனிபர் முதலில் (பணம் பெற்றுக்கொண்டு) கிரயமாகவும் பிறகு (பணம் பெறாமல்) நன்கொடையாகவும் சொல்லி அளித்த (குறிப்பு:- அதில் ஒரு பகுதி CRZ உட்பட்டது) நிலத்தின் மீது ஏன்..? எதற்காக..? இந்த சிறப்பு அக்கறை ஏற்பட வேண்டும்..
சரி நகராட்சிக்கு இந்நிலம் (சர்வே எண் 278 இன் சில பகுதி) மேலும் வரவு (போனஸ்) தான் இருவேறு கருத்தல்ல - அதில் இத்திட்டதிற்கு (கிடங்கிற்கு) செல்லும் பாதை குறித்து இதுநாள் வரை நகராட்சியால் தெளிவு படுத்தப்படவில்லை / தெளிவு படுத்த முடியவில்லை.
எல்லாரும் ஒன்னு சேர்ந்து... காசு போட்டு... CRZ Zone குள்ள வராமே ரோட்டுக்கு இடம் வாங்கி நகராட்சிக்கி அர்பனிச்சி... பயோ கேஸ் திட்டத்த கொண்டு வாங்கப்பா பாப்போம்.... CP
சகோதரரே ..! நாம் சேர்ந்து காசு போடாமலேயே சாலை வசதியோடு நகராட்சியின் ஆளுகையில் நகரில் இடம் பல உண்டு. ஆனால் மிக பெரிய பிரச்சனை என்னவனில் அந்நிலத்தில் / அந்நிலம் அருகில் மக்கள் வரி பணத்தில் நகரின் தனி நபர்கள் / சுயநல வாதிகள் ஆதாயம் அடைய முடியாத சூழலில் அமைந்துள்ளது - இது ஒன்றே நகராட்சிக்கு சொந்தமான அந்நிலத்தின் குறைபாடு.
ஆகவே நகராட்சிக்கு சொந்தாமான நிலங்கள் இத்திட்டத்திற்கு புறக்களிக்க பட்டதாக கருதுகிறேன்..
யார் எதிர்த்தார்கள்...! ஒருநிமிடம் சிந்தியுங்கள் சகோதரரே..! நகரில் 5 வது வார்டு பகுதியில் (மயானத்தில்) பல லட்ச ரூபாய் மதிப்பீட்டில் நகராட்சியால் கட்டப்பட்ட குடிநீர் தேக்க தொட்டிக்கு அதை அடையும் குழாய் குறித்த பாதையை முதலில் திட்டமிடாமல் / தெளிவு இல்லாமல் குடிநீர் தேக்க தொட்டி கட்டப்பட்டு சுமார் 7 ஆண்டுகள் ஆகியும் மக்களுக்கு பயனில்லாமல் இன்று வரை நீர் தேக்க தொட்டி முடங்கி கிடப்பது குறிப்பிடத்தக்கது.
அன்று பலர் தெளிவில்லாமல் / விழிப்புணர்வு இல்லாமல் இருந்தார்கள் - இன்று சிலர் தெளிவோடும் / விழிப்புணர்வோடும் நகராட்சின் கீழ்மட்டம் / மேல்மட்டத்தில் கேள்வி கேட்க தொடக்கி விட்டார்கள்.. என்பதாலேயே பிரச்சனை ஆரம்பம்..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross