துஆச் செய்த அனைத்து உள்ளங்களுக்கும் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன். posted byசொளுக்கு.M..A.C.முஹம்மது நூஹ் (chennai)[03 May 2015] IP: 106.*.*.* India | Comment Reference Number: 40373
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்.
எனது தந்தை எம்.என்.சொளுக்கு முஹம்மது அப்துல் காதர் அவர்களின் மரணச் செய்தி கேட்டு அண்ணாரின் மறுமை வாழ்விற்காக துஆச் செய்த அனைத்து உள்ளங்களுக்கும் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன்.
மர்ஹூம் எனது தந்தை தன் வாழ் நாளில் யாருக்காவது தெரிந்தோ அல்லது தெரியாமலோ ஏதாவது சிறிய அல்லது பெரிய பிழைகளை செய்திருந்தால் , எனக்காகவும் என் தந்தைக்காகவும் அதனை மறந்து அவர்களை மன்னித்து, அவர்களின் மறுமை வாழ்விற்காக துஆ செய்ய உங்களை கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் அவர்கள் தங்களில் யாருக்காவது கடன் பட்டிருந்தால் , எனக்காகவும், என் தந்தைக்காகவும் அதனை உங்களால் தள்ளுபடி செய்ய முடிந்தால் எல்லாம்வல்ல அல்லாஹ் உங்களுக்கு மென் மேலும் நல்ல பரக்கத்தையும், நல்ல சுகத்தையும் தருவான் ஆமீன், அப்படி தள்ளுபடி செய்ய முடியாத நிலையில் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கிருபையை கொண்டு இன்ஷா அல்லாஹ் நான் அதனை திருப்பித் தந்து மர்ஹூம் அவர்களின் கடனை நான் கொடுப்பேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross