சுயநலம் புறம்தள்ள பட செல்ல வேண்டும்...! பொதுநலம் முன் செல்ல வேண்டும்...! posted byதமிழன் முத்து இஸ்மாயில். (INDIA)[04 May 2015] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 40382
நகராட்சி ஆணையர் எப்போது...! கிராம நிர்வாக அதிகாரியாக மாறினார்..!
இந்த சான்று கிராம நிர்வாக அலுவலத்தில் அல்லவா அளிப்பார்கள்..!
நகராட்சி அலுவலகத்தில் அளிக்கும் சான்று இதோ இப்படி அல்லவா இருக்க வேண்டும்..!
நகர்மன்ற கூட்டதில் ஒருமனதாக சர்வே எண் 278 இடத்தை சுற்றி 500 மீட்டருக்கு BUFFER ZONE (குடியிருப்புக்கு தடை) தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது ஆகவே அதை சுற்றி குடித்தனங்கள் கட்ட கட்டிட அனுமதி வழங்க பட மாட்டது - என்று சான்றளிக்கபடுகிறது. என்றல்லவா நீதி மன்றத்தில் சமர்ப்பித்திருக்க வேண்டும்.
இதிலிருந்து நமக்கு என்ன தெரிகிறது என்றால்.. எப்படியும் ரூபாய் 90 லட்சத்தை (பொது நலத்துக்காக அல்ல) சுயநலத்துக்காக செலவு செய்தே ஆகவேண்டும் என்ற இவரின் எண்ணம் வெளிபடுகிறது - பொது நலமாக இருக்குமேயானால் மேற்கூறிய வாசகத்துடன் நீதி மன்றதில் சமர்ப்பித்து இருக்க வேண்டும்..!
நகர்மன்ற உறுப்பினர்களால் BUFFER ZONE தீர்மானம் நிறைவேற்றிய பிறகு சான்று அளிப்பதால் நகராட்சிக்கு என்ன இழப்பு நேர்ந்திட போகிறது..?
மொகுதூம் ஜும்மா பள்ளியின் மயனாதில் கட்டப்பட்ட குடிநீர் தேக்க தொட்டிக்கு ஏற்பட்ட இழி நிலை இத்திட்டத்திற்கு ஏற்படாமல் இருக்கவே சில சமூக ஆர்வலர்கள் இத்திட்டம் அமையவிருக்கும் இடத்தின் சாலை வசதி / CRZ 1 குறித்த தெளிவு மற்றும் BUFFER ZONE குறித்த சந்தேகங்களை நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டு அறிந்து தெளிவு பெற விருபுவது அது தவறா..? அது குற்றமா..? அது இத்திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட நினைக்கும் சதியா..?
சும்மா பெயருக்கு, புகழுக்கு, கடமைக்கு மேலும் அதிகாரிகளின் தேவை நிறைவுக்கு வேண்டி 90 லட்ச ரூபாயை செலவழித்து விட்டு பிறகு சாலை / வண்டி பாதை வசதி அமைய பெறவில்லை , CRZ 1 க்குள் வருகிறது / BUFFER ZONE தீர்மானம் நிறைவேறவில்லை ஆகவே பயோ கேஸ் கட்டப்பட்ட கட்டிடம், குப்பைக்கான சுற்று சுவர் இவைகள் செயல்முறைக்கு வருவது தடைபெற்று விட்டது என அன்று இந்த அதிகாரிகள் நமக்கு காதில் பூ சுற்ற சந்தர்ப்பம் வழங்கி விட கூடாது என்ற அணுகுமுறையை / முன் தெளிவை சமூக ஆர்வலர்கள் தகவல் அறியும் உரிமை சட்டதின் மூலம் கேள்விகள் கேட்பது இத்திட்டத்திற்கு எதிராக அவர்கள் நடந்து கொள்கிறார்கள் என்று நினைப்பது நமது அறியாமையே இதற்கு காரணம்..
சமீபத்தில் போடப்பட்ட பூமி பூஜையையே நகராட்சி மறுக்கிறது என்றால் இன்னும் என்ன என்ன தில்லுமுல்லு வேலைகளை இந்த அதிகாரிகள் நமக்கு மறைத்து நம் நகர் மக்களின் காதில் பூ சுற்ற முடிவு பண்ணி இருப்பார்கள்..! என்பதை நாம் விளங்கி கொள்வோமாக..
சமூக ஆர்வலர்களின் சந்தேகங்களை தெளிவு படுத்தும் வகையில் நீதிமன்றத்தில் நகராட்சி தெளிவான ஆவணங்களை சமர்ப்பித்து சுய நல வாதிகளின் எதிர்பார்ப்பு ஈடேறாமல் பொதுமக்களுக்கு பயன்தரும் வகையில் இத்திட்டம் இனிதே நடந்தேற வாழ்துக்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross