2000ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட மத்திய அரசின் MUNICIPAL SOLID WASTES (MANAGEMENT AND HANDLING) RULES 2000 விதிமுறைகள் படி, குப்பை கொட்டுவதற்காக புதிதாக தேர்வு செய்யப்படும் இடத்தினை சுற்றி, 500 மீட்டர் தூரத்திற்கு, குடித்தனங்களுக்கு அனுமதி இல்லை என்ற அறிவிப்பு - உள்ளாட்சி மன்றத்தின், நகரமைப்பு திட்டத்தில் இணைக்கப்படவேண்டும்.
9. A buffer zone of no-development shall be maintained around landfill site and shall be incorporated in the Town Planning Department's land-use plans (SCHEDULE III, ஷரத்து 9)
காயல்பட்டினம் தென் பாகம் கிராமம் சர்வே எண் 278 இடத்தில் குப்பைக்கொட்ட நகர்மன்றம் முடிவெடுத்த நிலையில், அப்பகுதியினை சுற்றி - 500 மீட்டர் சுற்றளவில், குடிதனங்களுக்கு அனுமதி இல்லை (NO DEVELOPMENT ZONE; BUFFER ZONE) என்ற அறிவிப்பு வெளியிட, நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக் - கடந்த நவம்பர் மாதம் கூட்டத்தில், தீர்மானம் ஒன்று கொண்டு வந்தார்.
BUFFER ZONE குறித்த இந்த தீர்மானத்தை, 13வது வார்டு உறுப்பினர் தவிர்த்து அனைத்து உறுப்பினர்களும் எதிர்க்கவே, அத்தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது (தீர்மானம் எண் 905; 25.11.2014).
சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில், ஏப்ரல் 30 அன்று விசாரணைக்கு வந்த இதுகுறித்த வழக்கின் போது, அரசு தரப்பில் - காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் காந்திராஜ் வழங்கியிருந்த சான்று ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது.
அதில் - சர்வே எண் 278 இடத்தை சுற்றி 500 மீட்டருக்கு குடித்தனங்கள் இல்லை என்றும், 300 மீட்டருக்கு பூங்காங்கள் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சர்வே எண் 278 இடத்தை சுற்றி தற்போது 500 மீட்டர் தூரத்திற்கு எந்த குடித்தனங்கள் இல்லாவிட்டாலும், அந்த இடத்தினை சுற்றி நிலம் வைத்துள்ளவர்கள், விபரம் அறியாத மக்களிடம் - தங்கள் நிலங்களை குடித்தனங்களுக்க்கு விற்காமல் இருக்கவே - மத்திய அரசு, இவ்விதிமுறையை அறிமுகம் செய்தது.
தற்போது குப்பைகள் கொட்டப்பட்டு வரும் பப்பரப்பள்ளி பகுதி - துவக்க காலத்தில், குடித்தனங்கள் இல்லாத பகுதியாக இருந்தது. கால போக்கில், அந்த இடத்தினை சுற்றி நிலங்கள் விற்கப்பட்டு, குடித்தனங்கள் துவங்கவே, அங்கு குப்பைகள் கொட்ட எதிர்ப்புகள் துவங்கியுள்ளது.
இது போன்ற நிலை - புதிதாக உருவாக்கப்படும் உரக்கிடங்குகளில் உருவாகக்கூடாது என்ற நோக்கிலும், மத்திய அரசு, இவ்விதிமுறையை அறிமுகம் செய்தது.
இது சம்பந்தமான நகர்மன்றத் தலைவரின் தீர்மானம் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், ஆணையரின் இச்சான்று - சட்டத்தின் பார்வையில் கேள்விக்குறியானது. அதுமட்டுமன்றி, இத்தீர்மானம் நிறைவேற்றப்படாமல் - சுற்றுச்சூழல் துறைகளால், அவ்விடத்தில் குப்பைகள் கொட்ட அனுமதி வழங்க முடியாது.
|