காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃபின் 88ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள், 19.04.2015 ஞாயிற்றுக்கிழமை 19.00 மணிக்கு திக்ர் மஜ்லிஸுடன் துவங்கியது.
ரஜப் மாதம் முழுவதும் ஒவ்வொரு நாளும் அதிகாலையில் ஸஹீஹுல் புகாரீ கிரந்தத்திலிருந்து நபிமொழிகள் ஓதப்பட்டு, காலை 09.15 மணியளவில் அன்றைய நாளில் ஓதப்பட்ட நபிமொழிகளுக்கு மார்க்க அறிஞர்களால் விளக்கவுரை வழங்கப்படுவது வழமை.
ரஜப் 14 அன்று (மே 04ஆம் நாள்) ஓதப்பட்ட நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக் கல்லூரி, முஅஸ்கர் மகளிர் அரபிக் கல்லூரி ஆகியவற்றின் பேராசிரியர் மவ்லவீ ஏ.கே.முஹம்மத் அஸ்ஃபர் அஷ்ரஃபீ வழங்கினார்.
நபிகளாரின் குடும்பத்தினரான அஹ்லு பைத்துகளை கண்ணியப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்த தகவல்கள் அவரது உரையில் இடம்பெற்றன.
ரஜப் 15ஆம் நாள் (மே 05) ஓதப்படும் நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, மேலப்பாளையம் உதுமானிய்யா அரபிக் கல்லூரியின் முதல்வர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எஸ்.ஹைதர் அலீ மிஸ்பாஹீ வழங்குகிறார்.
ஒவ்வொரு நாளும் நடைபெறும் சொற்பொழிவு நிகழ்ச்சிகள், http://www.bukhari-shareef.com/eng/live/ என்ற வலைதள பக்கத்தில் ஒலி நேரலை செய்யப்படுகிறது.
மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் 1436ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் 1435ஆம் ஆண்டு (கடந்தாண்டு) 14ஆம் நாள் நிகழ்ச்சிகள் தொடர்பான செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |