காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃபின் 88ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள், 19.04.2015 ஞாயிற்றுக்கிழமை 19.00 மணிக்கு திக்ர் மஜ்லிஸுடன் துவங்கியது.
ரஜப் மாதம் முழுவதும் ஒவ்வொரு நாளும் அதிகாலையில் ஸஹீஹுல் புகாரீ கிரந்தத்திலிருந்து நபிமொழிகள் ஓதப்பட்டு, காலை 09.15 மணியளவில் அன்றைய நாளில் ஓதப்பட்ட நபிமொழிகளுக்கு மார்க்க அறிஞர்களால் விளக்கவுரை வழங்கப்படுவது வழமை.
ரஜப் 15 அன்று (மே 05ஆம் நாள்) ஓதப்பட்ட நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, மேலப்பாளையம் உதுமானிய்யா அரபிக் கல்லூரியின் முதல்வர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எஸ்.ஹைதர் அலீ மிஸ்பாஹீ வழங்கினார்.
மதீனத்து அன்ஸாரி நபித்தோழர்களை மதிக்க வேண்டியதன் அவசியம், அவர்களை மனம் நோகச் செய்தால் ஏற்படும் விளைவுகள், அன்ஸாரிகளை நபிகளார் மதித்த விதங்கள் குறித்த தகவல்கள் அவரது உரையில் இடம்பெற்றன.
ரஜப் 16ஆம் நாள் (மே 06) ஓதப்படும் நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, காயல்பட்டினம் ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.ஏ.கே.முஹம்மத் முஹ்யித்தீன் மஹ்ழரீ வழங்குகிறார்.
ஒவ்வொரு நாளும் நடைபெறும் சொற்பொழிவு நிகழ்ச்சிகள், http://www.bukhari-shareef.com/eng/live/ என்ற வலைதள பக்கத்தில் ஒலி நேரலை செய்யப்படுகிறது.
மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் 1436ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் 1435ஆம் ஆண்டு (கடந்தாண்டு) 15ஆம் நாள் நிகழ்ச்சிகள் தொடர்பான செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |