காயல்பட்டினம் தீவுத்தெருவில், ஈக்கியப்பா தைக்கா அருகிலுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி எதிர் சாலையில் இன்று கண்ணில் பட்ட காட்சிதான் இது!
அங்குள்ள குடிநீர் வினியோக வால்வு தொட்டி அடிக்கடி பழுதாவதும், தொடர் முறையீடுகளுக்குப் பிறகு சரிசெய்யப்படுவதும் வாடிக்கை.
இதுகுறித்து விசாரித்தபோது, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அருகிலிருப்பதால், வினியோகத்திற்காகத் தண்ணீரைத் திறக்கும்போது, வால்வு தொட்டிக்கு பதிக்கப்பட்டுள்ள 3 இன்ச் அகலமுள்ள பீ.வி.சி. குழாய் - தண்ணீரின் அழுத்தம் தாங்காமல் வெடித்து விடுவதாகவும், அதிலிருந்து குடிநீர் வீணாகப் பீறிட்டு ஓடுவதாகவும், இது போன்ற இடங்களில் மட்டுமாவது பீ.வி.சி. குழாய்களைத் தவிர்த்து இரும்புக் குழாய் பதித்தால், இப்பிரச்சினைக்குத் தீர்வு ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் அறிய முடிந்தது.
|