காயல்பட்டினம் அல்அமீன் நர்சரி & துவக்கப்பள்ளியின் ஆண்டு விழா, 23.04.2015 வியாழக்கிழமையன்று 16.30 மணியளவில், பள்ளியின் செயலாளர் எஸ்.ஓ.அபுல்ஹஸன் கலாமீ தலைமையில், பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்க செயலாளர் அ.வஹீதா, அவரது கணவர் அப்துல் காதர் சின்னத்தம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளி தாளாளர் எம்.ஏ.புகாரீ நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். ஆட்சிக்குழு ஆலோசகர் எஸ்.எம்.பி.சமீனா யாஸ்மின் வரவேற்புரையாற்றினார். பள்ளி முதல்வர் எம்.விஜயா ஆண்டறிக்கை சமர்ப்பித்தார்.
இவ்விழாவில், வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் உதவி பேராசிரியரும் - வணிக நிர்வாகவியல் துறைத்தலைவருமான எஸ்.ஏ.ரஹ்மத் ஆமினா பேகம் சிறப்பழைப்பாளராகக் கலந்துகொண்டு, மாணவியருக்கு பட்டங்களை வழங்கி, உரையாற்றினார்.
கல்வியில் சிறந்து விளங்கிய மாணவ-மாணவியருக்கும், விளையாட்டுப் போட்டிகளில் வென்றோருக்கும் அவர் பதக்கங்களையும், சான்றிதழ்களையும் வழங்கினார்.
பள்ளி ஆசிரியை ஷாஹின் நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது. விழா ஏற்பாடுகளை, பள்ளியின் ஆட்சிக்குழு தலைவர் ஏ.எஸ்.முஹம்மத் அஷ்ரஃப் தலைமையில் பள்ளி ஆசிரியையர் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.
தகவல் & படங்கள்:
வீனஸ் ஸ்டூடியோ
அல்அமீன் பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |