மே 01 உழைப்பாளர் நாளை முன்னிட்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தொழிலாளர் பிரிவான சுதந்திர தொழிலாளர் யூனியன் சார்பில் காயல்பட்டினத்தில் கொடியேற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து, அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
மே 01 உழைப்பாளர் நாளாகும். இதனை முன்னிட்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தொழிலாளர் பிரிவான சுதந்திர தொழிலாளர் யூனியன் சார்பில், தமிழ்நாடு மாநிலம் முழுவதும் அதன் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட சுதந்திர தொழிலாளர் யூனியன் சார்பில், காயல்பட்டினம் பேருந்து நிலையம் அருகில், இன்று (மே 01ஆம் நாள்) வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் - சுதந்திர தொழிலாளர் யூனியன் கொடியை ஏற்றினார்.
முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். அரபி ஷாஹுல் ஹமீத் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சுதந்திர தொழிலாளர் யூனியன் தூத்துக்குடி மாவட்ட அமைப்பாளர் ஆர்.பி.ஷம்சுத்தீன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். முஸ்லிம் லீக் நகர தலைவர் வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர், மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப் ஆகியோர் கருத்துரையாற்றினர்.
நகர பொருளாளர் எம்.ஏ.முஹம்மத் ஹஸன் நன்றி கூற, துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. நகர துணைச் செயலாளர் எம்.இசட்.சித்தீக், 03ஆவது வார்டு செயலாளர் ஏ.ஆர்.ஷேக் முஹம்மத் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். நிறைவில் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் & படங்கள்:
A.R.ஷேக் முஹம்மத்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - சுதந்திர தொழிலாளர் யூனியன் சார்பில் கடந்தாண்டு (2014) நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |