சுமார் 30 அடி நீளம் கொண்ட மரம் ஒன்று ஏப்ரல் 29 புதன்கிழமை மாலையில், காயல்பட்டினம் கடலிலிருந்து கரையொதுங்கிக் கிடந்துள்ளது.
அப்பகுதியில் நின்றுகொண்டிருந்த இளைஞர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், திருச்செந்தூர் சரக வனத்துறை அலுவலர் ரத்தினம், நேற்று (ஏப்ரல் 30) நண்பகல் 12.00 மணியளவில் வந்து மரத்தைப் பார்வையிட்டார்.
கரையொதுங்கிய மரம் விலை மதிப்பிற்குரியதுதானா என்பது குறித்து சோதித்து அறியவுள்ளதாகவும், அவ்வாறு இருந்தால் அதை எடுத்துச் சென்று, வனத்துறை மூலம் பொது ஏலம் விடப்படும் என்றும் அவர் காயல்பட்டணம்.காம் இடம் தெரிவித்தார்.
கள உதவி:
M.A.K.ஜெய்னுல் ஆப்தீன் |