காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃபின் 88ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள், 19.04.2015 ஞாயிற்றுக்கிழமை 19.00 மணிக்கு திக்ர் மஜ்லிஸுடன் துவங்கியது.
ரஜப் மாதம் முழுவதும் ஒவ்வொரு நாளும் அதிகாலையில் ஸஹீஹுல் புகாரீ கிரந்தத்திலிருந்து நபிமொழிகள் ஓதப்பட்டு, காலை 09.15 மணியளவில் அன்றைய நாளில் ஓதப்பட்ட நபிமொழிகளுக்கு மார்க்க அறிஞர்களால் விளக்கவுரை வழங்கப்படுவது வழமை.
ஏப்ரல் 29 அன்று ஒன்பதாம் நாளில், ஓதப்பட்ட நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.அப்துல்லாஹ் முஹம்மத் லெப்பை மிஸ்பாஹீ வழங்கினார்.
இறைவிசுவாசம் கொண்டவனின் சமூகப் பொறுப்புகள், கடமைகள், ஒற்றுமையின் அவசியம் உள்ளிட்டவை குறித்து அவரது உரையில் செய்திகள் இடம்பெற்றன.
ரஜப் 10ஆம் நாள் (ஏப்ரல் 30) ஓதப்படும் நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான் தங்ஙள் அஹ்ஸனீ ஃபாழில் பாக்கவீ வழங்குகிறார்.
ஒவ்வொரு நாளும் நடைபெறும் சொற்பொழிவு நிகழ்ச்சிகள், http://www.bukhari-shareef.com/eng/live/ என்ற வலைதள பக்கத்தில் ஒலி நேரலை செய்யப்படுகிறது.
மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் 1436ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் 1435ஆம் ஆண்டு (கடந்தாண்டு) ஒன்பதாம் நாள் நிகழ்ச்சிகள் தொடர்பான செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |