‘தினத்தந்தி’ நாளிதழின் ஆறுமுகநேரி - காயல்பட்டினம் வட்டார செய்தியாளர் ஏ.பாஸ்கர் (கைபேசி எண்: +91 94421 49301) தாயார் அ.சிலுவையம்மாள், இன்று (ஏப்ரல் 29 புதன்கிழமை) காலை 06.00 மணியளவில், ஆறுமுகநேரியில் காலமானார். அவருக்கு வயது 85.
நாளை (ஏப்ரல் 30 வியாழக்கிழமை) காலையில், ஆறுமுகநேரி மடத்துவிளை புனித சவேரியார் கோவில் தெருவிலுள்ள - அவரது இளைய மகன் ஜெ.நெல்சன் இல்லத்தில் இறுதிச் சடங்குகள் நிறைவுற்ற பின், காலை 10.00 மணியளவில், புனித சவேரியார் ஆலயத்தில் அன்னாரது அடக்கத் திருப்பலியும், அதனைத் தொடர்ந்து ஆறுமுகநேரி - அடைக்கலபுரம் சாலையில் பள்ளிவாசல் பஜார் அருகிலுள்ள ஆர்.சி. கல்லறைத் தோட்டத்தில் உடல் நல்லடக்கமும் நடைபெறவுள்ளது. |