காயல்பட்டினம் நகரில் உள்ள புற்றுநோய் பாதிப்புகளுக்கு சாட்சியாக, ஊடகங்கள் வாயிலாக வெளியுலகுக்கு கருத்து தெரிவித்த - காயல்பட்டினம் காட்டு தைக்கா தெருவைச் சேர்ந்த ஜீனத் என்ற பெண்மணி நேற்று (ஏப்ரல் 28 செவ்வாய்க்கிழமை) 15.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 45. அன்னார்,
மர்ஹூம் அபூபக்கர் அவர்களின் மகளும்,
மர்ஹூம் அப்துல்லாஹ் அவர்களின் மருமகளாரும்,
ட்ரைவர் கிதுரு முஹம்மத் என்பவரின் (தொடர்பு எண்: +91 74187 88308) மனைவியும்,
அக்பர், ஸலீம், ஜாஹிர், ஹைதர், நிஜாமுத்தீன் ஆகியோரின் சகோதரியும்,
ஸித்தீக், தவ்ஃபீக், ஷஃபீக் ஆகியோரின் தாயாரும்,
அப்துர்ரஹ்மான் என்பவரின் கண்ணும்மாவும்,
முஹம்மத் ஹுஸைன், மர்ஹூம் செய்யித், அபுல்ஹஸன், ஷம்சு, சேக், கவ்து முஹ்யித்தீன், சுலைமான், காஸிம், ஜவாஹிர், நாகூர் மீரான் ஆகியோரின் மாமியும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா, இன்று 10.30 மணியளவில், காயல்பட்டினம் அரூஸிய்யா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
தகவல்:
ஸதக்கத்துல்லாஹ்
‘தி இந்து’ தமிழ் நாளிதழின் நடுப்பக்க செய்தி ஆசிரியர் சமஸ், காயல்பட்டினத்திற்கு நேரில் வந்து, இப்பெண்மணி உள்ளிட்ட - புற்றுநோய் பாதிப்பிற்குள்ளான சிலரை நேர்காணல் செய்து திரட்டிய தகவல்களின் அடிப்படையில், கடந்த 2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ஆம் நாளன்று வெளியான இதழில், “அரசே... அபலைகளின் அழுகுரல் உனக்குக் கேட்கிறதா?” எனும் தலைப்பில் விரிவான கட்டுரை எழுதியிருந்தார். அக்கட்டுரையில், காலமான பெண்மணி ஜீனத்தும் தனது புற்றுநோய் பாதிப்பு குறித்து கருத்துக் கூறியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து, ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சி சார்பில், 2014 - அக்டோபர் 26, ஆம் நாளன்று ஒளிபரப்பப்பட்ட ‘ரவுத்திரம் பழகு’ நிகழ்ச்சியிலும் அவர் கருத்து தெரிவித்திருந்தார்.
புற்றுநோய் பாதிப்பிற்குள்ளானவர்களை ஊடகங்கள் அணுகியபோது அவர்கள் கருத்துக்கூறத் தயங்கிய நேரத்தில், “என் வாழ்நாளை நான் எண்ணிக்கொண்டிருக்கிறேன்... நான் சொல்லும் கருத்துக்களால் நம்ம ஊருக்கு நல்லது நடக்கும்ன்னா அதைச் செய்ய நான் தயங்கப் போவதில்லை...” என்று கூறி, ஊடகத்தினர் பலமுறை வந்தபோதிலும் - நேர்காணல் செய்ய தயக்கமின்றி ஒத்துழைத்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. |