காயல்பட்டினம் சொளுக்கார் தெருவில், அடிப்பகுதி சிதிலமுற்று - எந்நேரத்திலும் ஆபத்தை ஏற்படுத்தும் நிலையிலிருந்த மின்கம்பம், 22.04.2015 அன்று அகற்றப்பட்டு, புதிய மின்கம்பம் நிறுவப்பட்டுள்ளது.
இரும்பாலான மின்கம்பங்கள் தவிர்க்கப்பட்டு, தற்போது சிமெண்ட் - ஜல்லி கலவையால் உருவாக்கப்படும் மின்கம்பங்களே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இரும்பு மின்கம்பங்கள் பல்லாண்டுகளுக்குப் பிறகும் பழுதின்றி இருக்க, இந்த சிமெண்ட் மின் கம்பங்களோ தொடர்ந்து பழுதடைந்தும், சிதிலமடைந்தும் பொதுமக்களுக்கு உயிர் மீது அச்சத்தை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
தகவல் & படங்கள்:
M.L.ஹஸன் பஸரீ
மின்வாரியம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |