Re:... posted byVilack sma (jeddah)[11 May 2015] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40501
வாழ்த்துக்கள் . இவர்களைப்போன்றே , எனது சகோதரியின் மகன் M .S . அப்துல் ரஹ்மான் ( S /O S .M .A . Muhideen Sadakkathullah சென்னையில் தனியார் பள்ளியில் படித்து 1154 மதிப்பெண்கள் பெற்றுள்ளார் .
நமதூரிலும் இந்த வருடம் வெளியூர் மாணவரே முதலிடத்தை பெற்றுள்ளார் . ஊரிலிருக்கும் மாணவர்கள் இந்த வருடம் மிகக்குறைந்த மதிப்பெண்களே பெற்றுள்ளனர் .
படிப்பதில் ஆர்வம் குறைந்துவிட்டதா ? ஊரில் படிப்பதர்கேற்ற அமைதியான சூழ்நிலை இல்லையா ?
ஏதோ ஒருசில மாணவர்கள் குறைவான மதிப்பெண்கள் பெற்றிருந்தால் , அது அவர்களுடைய தனிப்பட்ட திறமையை சோதிப்பதாக இருக்கும். ஆனால் இந்த வருடம் ஊரின் ஒட்டுமொத்த மாணவர்களும் குறைவான மதிப்பெண்களே பெற்றுள்ளனர் . காரணங்கள் பல இருக்கலாம் . ஆனால் தலையாய காரணம் என்று சொன்னால் அது " அமைதியின்மை " . இதை சரி செய்தாலே போதும் . மாணவர்கள் கவனம் சிதறாமல் படிப்பதற்கு தோதுவாக இருக்கும் .
நம்முடைய பிள்ளைகள்தானே படிக்கிறார்கள் . அவர்களின் எதிர்காலம் சிறப்பாக இருந்தால்தானே நாமும் நிம்மதியாக இருக்கலாம் என்று ஒவ்வொருவர் மனதிலும் தோன்றினாலே போதும் , இன்ஷா அல்லாஹ் வரும் காலங்களில் நமதூர் மாணவர்களே மாநிலத்தின் முதல் மாணவராக வருவார் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross