ஜனாஸாவை வேதனை செய்ய வைக்கும் posted byN.S.E.மஹ்மூது (அல் ஜுபைல் – சவுதி அரேபியா)[13 May 2015] IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40529
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
தாய்ச்சபையின் செயல்கள் அனைத்தும் சமுதாய மக்களின் இன்றைய அவசியத்தையும் நாளைய தேவையையும் நிறைவேற்றக்கூடிய தொலைநோக்கு சிந்தனையை கொண்டதாகவே அமைந்து வருகிறது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
அதே நேரத்தில் சில விசயங்களை ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது - அதை சுட்டிக்காட்ட வேண்டுமென்பது எனது விருப்பம் - அதில் நல்ல கருத்துகள் இருப்பின் அதை ஏற்று அதன்படி செயலாற்றுவது நல்லது.
ஆம்புலன்ஸ் மற்றும் ஃப்ரீஸர் வாங்குவது சம்பந்தமாக தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறீர்கள். சகல வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸ் வாங்குவது என்பது மிக,மிக அவசியம் – ஆம்புலன்ஸ் சேவை முறையாக மக்களுக்கு பயன்பட சகல ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும்மென்பது அதைவிட அவசியம் – ஆகவே ஆம்புலன்ஸ் வாங்குவதற்கு முன் அதற்கான ஏற்பாடுகளை முறைப்படி செய்துக்கொள்ளுங்கள். அப்போதுதான் அந்த திட்டம் பலனைத்தரும்.
மரணித்தவர்களது ஜனாஸாவைப் பாதுகாக்க ஃப்ரீஸர் வாங்க தீர்மானித்திருப்பது என்னைப் பொருத்தவரை நல்லதாக தெரியவில்லை.
ஜனாஸாவை ” பாதுகாக்க “ ஃப்ரீஸர் என்பது சரியல்ல – பொதுவாக ஒருவர் மரணித்துவிட்டால் அவரை உடனே அடக்கம் செய்வதுதான் நல்லது. எவ்வளவுக்கு எவ்வளவு துரிதமாக அடக்கமுடியுமோ அவ்வளவுக்கு துரிதமாக அடக்கம் செய்ய சொல்லி ஆலிம்கள் கட்டளையிடுகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் மயித்துடைய உடம்பின் சூடு ஆறுமுன்பே, மயித்தைக் குளிப்பாட்டி அடக்கி விடுங்கள் என்கிறார்கள் பெரியோர்கள்.
அப்படியாயின் மயித்தை ஃப்ரீஸரில் வைப்பது என்பது ஆலிம்களின் / பெரியோர்களின் கட்டளைக்கு மாற்றமாகிறது. மேலும் மயித்தை அதிக நேரம் வைத்திருப்பது அதுவும் ஃப்ரீஸரில் வைத்திருப்பது மயித்திற்கு வேதனையளிப்பதாகும்.
இப்பொழுது ஃப்ரீஸர் ஒன்றே ஒன்று, நம் ஊரிலே உலாவிக் கொண்டிருக்கிறது அதை பயன்படுத்துவதை பெரும்பாலான மக்கள் விரும்பாதபோது - ஜனாஸாவை ஃப்ரீஸரில் வைக்கும் வசதிகள் அதிகமானால் அதுவும் நாமே அந்த வசதியை ஏற்படுத்திக் கொடுத்தால் , மக்களின் மனம் மாற வாய்ப்பாகும்.
இதன் மூலம் ஜனாஸாக்கள் எல்லாம் அடக்கம் செய்வதில் ஓரிரு நாள் தாமதம் என்பது ஆரம்பமாகி - மகன் அமெரிக்காவில் இருக்கிறான் / மகள் அரேபியாவில் இருக்கிறாள் – ஃளைட் கிடைக்கவில்லை / பாஸ்போர்ட் பிரச்சனை இன்னும் ஒரு வாரம் / பத்து நாளில் வந்துவிடுவார்கள் அதன் பின்தான் அடக்கம் என்று தாமதப்படுத்தி யூத / கிரிஸ்துவ கலாச்சாரத்தை பின்பற்றிவிடுவார்களோ! என்ற அய்யப்பாடு ஏற்படுகிறது – அல்லாஹ்தான் அவற்றிலிருந்து நம் மக்களை காப்பற்ற வேண்டும்.
என்னுடைய இந்த கருத்தை பார்த்ததும் சிலர் சொல்வார்கள் – நீங்கள் சொல்கிற மாதிரி எல்லாம் ஒரு வாரம் / பத்து நாளெல்லாம் இந்த ஃப்ரீஸரில் வைக்க இயலாது ஒரிரு நாள்தான் வைக்க முடியும் என்று – உண்மைதான் , இந்த ஓரிரு நாள் பழக்கம்தானே! ஒரு வாரம் / பத்து நாளுக்கு என்று இழுத்துக்கொண்டுப் போய் ஹாஸ்பிடல்களில் உள்ள சவக்க்கிடங்குகளில் வைக்க வழிகாட்டி..
ஓரிரு நாள் என்றாலும் அது மயித்திற்கு வேதனைதானே! எனவே இது ஜனாஸாவை பாதுகாக்க வைக்கும் உறைப்பெட்டி அல்ல ஜனாஸாவை வேதனை செய்ய வைக்கும் உறைப்பெட்டி என்பதை உணர்த்த விரும்புகிறேன்.
ஆகவே தயவு செய்து ஃப்ரீஸர் வாங்கும் திட்டத்தை கைவிடும்படி கேட்டுக்கொள்கிறேன். வஸ்ஸலாம்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross