காயல்பட்டினம் நகர மக்களின் அவசர மருத்துவ சேவைக்காக பெரிய அளவிலான ஆம்புலன்ஸ் வாகனம் வாங்கவும், மரணித்தவர்களது ஜனாஸாக்களைப் பாதுகாக்க ஃப்ரீஸர் வாங்கவும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை:-
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை பொதுக்குழுக் கூட்டம், காயல்பட்டினம் சதுக்கைத் தெருவிலுள்ள - நகர கிளை அலுவலகமான தியாகி பி.எச்.எம்.முஹம்மத் அப்துல் காதிர் மன்ஸிலில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன், மாநில துணைச் செயலாளர் எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட துணைத்தலைவர் மன்னர் ஏ.ஆர்.பாதுல் அஸ்ஹப் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். ஹாஃபிழ் என்.முஹம்மத் ஸாலிஹ் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ் வரவேற்புரையாற்றினார். கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய நகர தலைவர் வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் தலைமையுரையாற்றினார்.
மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
என்.டீ.அஹ்மத் ஸலாஹுத்தீன் நன்றி கூற, அரபி ஷாஹுல் ஹமீத் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது. இக்கூட்டத்தில் பின்வருமாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - அனைத்து வார்டுகளிலும் கொடியேற்றம்:
ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட படி, 12.05.2015 செவ்வாய்க்கிழமையன்று 16.30 மணி முதல் 18.30 மணி வரை, காயல்பட்டினம் நகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் தாய்ச்சபையின் பிறைக்கொடியை ஏற்றுவதற்கு, வார்டு வாரியாக குழுக்களை நியமித்து இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 2 - சமூகப் பணிகளில் அக்கறை:
புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வார்டு நிர்வாகிகள் அனைவரும், தத்தம் பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய சமூகப் பணிகள் தொடர்பில் முழு அக்கறை செலுத்திட இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 3 - ஆம்புலன்ஸ், ஃப்ரீஸர் வாங்கல்:
காயல்பட்டினம் நகரின் எல்லா சமயங்களையும் சேர்ந்த மக்களின் அவசர மருத்துவத் தேவைகளுக்காக, நகரின் மக்கள் தொகையையும் கருத்திற்கொண்டு முழு வசதிகளுடன் கூடிய பெரிய அளவிலான ஆம்புலன்ஸ் (மருத்துவ உதவி) வாகனம் ஒன்றையும், மரணித்தவர்களது ஜனாஸா (சடலங்களைப்)வைப் பாதுகாக்க, உறைபெட்டி (ஃப்ரீஸர்) வாங்கவும் தீர்மானிக்கப்பட்டதோடு, இவற்றுக்கான ஒருங்கிணைப்புப் பணிகளைச் செய்திட, எம்.எச்.அப்துல் கரீம் வசம் பொறுப்பளிக்கப்பட்டது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளையின் முந்தைய கூட்டம் குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |