வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் வாங்கிய வழக்கில் குற்றவாளிகள் என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் 3 பேருக்கு - தண்டனை வழங்கி - பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், செப்டம்பர் 27 அன்று தீர்ப்பு வழங்கியது.
அத்தீர்ப்பினை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனு மீதான முடிவு இன்று காலை பெங்களூரில் உள்ள கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் நீதிபதி குமாரசாமியால் வழங்கப்பட்டது.
அதில் - ஜெயலலிதா குற்றவாளி அல்ல என தீர்ப்பு வழங்கப்பட்டது.
தேதி .............................11
நேரம்............................11
அறை எண்.............. ...14
தீர்ப்பு பக்கங்கள்..... ...900
சோதிடத்திற்கும்,நியுமராலஜிக்கும்,இருக்கும் மதிப்பு,மரியாதை
கூட சட்டத்திற்கும்,நீதிக்கும்,தர்மத்திற்கும் இந்த தேசத்தில் இல்லை என்பது நிதர்சனமான ஒன்று....
நான்கு ஆண்டு சிறைத் தண்டனையும்,நூறு கோடி அபராதமும்
நாற்பத்தொரு நாட்களில் தள்ளுபடியாகும் ஒரே தேசமும்
இந்தியாவாகத்தான் இருக்க முடியும்....
நம்மால் என்ன செய்ய முடியும்? வாங்க! மொட்டை அடிச்சு,
மண் சோறு சாப்பிட்டு,மகிழ்ச்சியோடு பட்டாசு வெடிச்சு,
மானங்கெட்ட செம்மறி ஆட்டு மந்தையில் ஐக்கியம் ஆகி விடலாம்....
8. அல்லாஹ்தான் காப்பாற்ற வேண்டும்! posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu)[11 May 2015] IP: 128.*.*.* Romania | Comment Reference Number: 40493
நீதி வெல்லனும்!அதுதான் எல்லோர்களின் எதிர்பார்ப்பு!
அடுத்ததென்ன 2G காரர்களுக்கு கிடுக்குப்பிடி,
இனிமேல் தலைமை அதிகாரத்திலிருந்து ஆராதனைகளும், அபிஷேகங்களும் ஆரம்பமாகிவிடும்,அழகிய தமிழகத்தில் ஆனந்தகீதமாக இந்த ஊழல் ராஜாக்களை ஊருக்குள் நுழைய விடலாமா?விரட்டி,விரட்டி அடியுங்கள் மக்களே என்ற வான் பிளக்கும் கச்சேரி கலை கட்டத்தொடங்கும்!
ஆரம்ப முதல் மிகவும் ஆக்ரோஷமாகவும்,வெறியுடனும் ஜெயலலிதாவிற்கு எதிராக வாதாடிய,முஸ்லிம் மக்களும், இனமும் இந்த நாட்டில் இருக்கக்கூடாது என்ற வக்கர வெறியோடு வெகுண்டெழுந்து உலாவரும் சுப்ரமணிசாமி
இத்தீர்ப்பின் மேல்முறையீட்டுக்கு செல்ல மாட்டேன் என்று சொல்கிறார். இதிலிருந்து ஏதோ ஒரு பூனை குட்டி வெளி வர உத்து பார்ப்பது போல் தெரிகிறதல்லவா?
அடுத்தது தமிழகத்தில் என்ன தாமரைகள் தங்குதடையின்றி பூத்துக்குலுங்கும் அதற்கருகாமையில் அழகிய இலைகளும் தளிர்விட்டு மகிழும்!
இங்கும் விரைவில் மாட்டிரச்சி வியாபாரிகள் வீட்டுக்குள் முடங்க வேண்டிய நேரம் வெகு தூரத்தில் இல்லை!
ஓரளவு சுதந்திரமாகவும் ,தைரியமாகவும் உலாவந்த ஓரிரு இன மக்கள் இனி எதற்கு வாய்திறந்தாலும் ஆப்பு,ஆப்பு தான்!
அல்லாஹ்தான் சிறுபான்மையினரை காப்பாற்றவேண்டும்.
சூழ்ச்சிகாரர்களைவிட மிகப்பெரிய சூழ்ச்சிகாரன் அவன்!
அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
10. நீதி, நேர்மை, நியாயம், தூய்மை, ஜனநாயகம், பணநாயகம், கேலிக்கூத்து = இந்தியா... posted byMauroof (Dubai)[11 May 2015] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 40495
எத்தனைக் காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே
இன்னும் எத்தனைக் காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே
சொந்த நாட்டிலே நம் நாட்டிலே
சத்தியம் தவறாத உத்தமர் போலவே நடிக்கிறார்
சத்தியம் தவறாத உத்தமர் போலவே நடிக்கிறார்
சமயம் பார்த்து பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்
சமயம் பார்த்து பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்
பக்தனைப் போலவே பகல் வேஷம் காட்டி
பாமர மக்களை வலையினில் மாட்டி
எத்தனைக் காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே
சொந்த நாட்டிலே நம் நாட்டிலே.
1954-ஆம் ஆண்டு வெளிவந்த, தேசிய விருது பெற்ற முதல் தமிழ் திரைப்படமான மலைக்கள்ளன் திரைப்படத்தின் மேற்சொன்ன பாடல் வரிகள் அனைத்து குற்றவாளிகளுக்கும் பொருந்தும்.
தமிழ் தி-இந்து இணையத்தில் இன்றைய 'நிகழ்நேரப் பதிவு: ஜெயலலிதா வழக்கின் தீர்ப்பு' என்ற செய்தியில்
//10.55 AM: திமுக தலைவர் கருணாநிதி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை. திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்//.
என்ற பதிவைப் பார்த்ததுமே நான் உறுதியாக நம்பினேன் தீர்ப்பு இப்படித்தான் வரும் என்று.
தீர்ப்பு எப்போது வெளியிடப்படும் என்று ஒரு சு.பா. வே முற்கூட்டி சொல்லும்போது, அதிகார வர்க்கத்தில் கோலோச்சிய இவர்களுக்கு தீர்ப்பு எவ்வாறு இருக்கும் என்ற தகவல் கசியாமலா இருந்திருக்கும்?. ஆனாலும் சும்மா சொல்லக்கூடாது, ஊழல் என்றால் என்னவென்றே அறியாத உத்தமர்கள் அல்லவா இவர்கள்.
ஒரு உத்தமருக்கு(?) வழங்கப்பட்டுள்ள இத்தீர்ப்புக்கு எதிராக மற்றொரு உத்தமர்(?) கூட்டம் எவ்வகையான மேல் முறையீடு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போகிறது, அதன் மீதான தீர்ப்பு எவ்வாறு வரப்போகிறது என்பனவற்றை பொறுத்திருந்து பார்ப்போம்.
11. Re:... posted bykamalmusthafa (abha.ksa)[11 May 2015] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40496
என்னப்பா இது ஒரு நீதிபதிகுற்ற வாளினு தண்டனை கொடுக்கிறார் இன்னொரு நீதிபதி நீ நிரபராதி என்று விடுதலை செய்கிறார் இதுக்கு ஏன்18 வருடங்களை கடத்தி மக்களின் வரிப்பணத்தை எல்லாம் வீன்சிலவு செய்து மக்களுக்கும் காவல் துறைக்கும் மனஉளைச்சலையும் வேதனையும் கொடுத்து இந்த கேஸ்சை இவ்வளவு நாள் இழுத்து அடிக்க வேண்டும் அப்பவே கேஸ் சை தள்ளுபடி செய்திருந்தால் மகளின் வரிப்பனமாவது மிஞ்சி இருக்கும் சரி இதோடவாவது விட்டாங்களே இதை எல்லாம் பார்க்க கூடாது என்று நினைத்து தான் நீதி மன்றங்களில் இருக்கும் நீதி தேவதைஇன் கண்கள் கட்டப்பட்டுஉள்ளதோ என்னமோ சரி இனி நமவேளைகல பாப்போம் அப்போதான் நம்ம பொழப்பு ஓடும் எது நடக்குமோ அது நடந்துதானே ஆகும்
சட்டத்தின் பின்னால் நின்று சதிராடும் கூட்டம்
தலைமாறி மாறி ஆடும் சதிகார கூட்டம்
என்றைக்கும் மேலிடத்தில் இவர் மீது நோட்டம்
இப்போது தெரியாது எதிர்காலம் காட்டும்.
நாடக வேஷம் கூட வராது
நாளைய உலகம் இவரை விடாது சொல்கின்றேன்.
பலநாள் திருடன் ஒருநாள் சிறையில்
பாவம் செய்தவன் தலைமுறை வரையில் காண்கின்றேன்.
இந்த பாடல் ஒலிக்கும் நேரம் - தீர்ப்பு வழங்கும் நேரம்.
கலைஞரும் அவர் சகாக்களும் ஆலோசனை செய்யும் நேரம்.
நீதி கேட்டு நெடிய பயணம் போகவேண்டுமா இல்லை இதோடு நீதி நின்றுவிடுமா...நீதி தேவன் மயக்கம் எழுதிய அண்ணாவின் தம்பிகளுக்கு அதிர்ச்சி. ஆனால் இரு தரப்பினரும் அண்ணாவின் தம்பிகள்தானே
குடும்ப சண்டை வீதிக்கு வந்தால் இப்படித்தான்.
சாந்தி நிலவட்டும்.
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போர்க்களமே
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே இரவானால் பகல் ஒன்று வந்திடுமே.
வேடிக்கையாய் பொழுது போகணும் கொஞ்சம் விளையாட்டை வாழ்ந்து பாக்கணும்,
13. Re:... posted byP.S.ABDUL KADER (KAYAL PATNAM)[11 May 2015] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 40500
சோதனைகளை
சாதனைகளாக்கிய
சரித்திர நாயகி
எங்கள் அம்மா!
விடாத விடாத மொத்த பைலயும் கெலரு 2G ல சம்மந்தப்பட்டவன் யாரு?
அப்புறம் அந்த வெளி நாட்ல இருந்து கார் வாங்கன கேசு அதுக்கு பணம் எங்கயிருந்து வந்துச்சி?
அந்த ஏர் செல் மேக்ஸிஸ் கேஸ் என்னாச்சி?
அடையார் வீட்ல இருந்து அறிவாலயத்துக்கு கேபில் போட்ட கேஸ் என்னாச்சி?
கேபில் இன்னும் இருக்குல்ல கெளருங்க வெளிய எடுங்க!
சென்னை கமிஷ்னர் CPCID உளவுத்துறை CPP எல்லாம் என்னா பண்றீங்க!
ரெட் ஜெயன்ட் மூவீஸ் கிளவுட் நைன் மோகனா பிக்சர்ஸ் இவங்களுக்கெல்லாம் படத்தை எடுக்க எங்க இருந்து பணம் வந்துச்சி? விசாரிங்க
மறுபடியும் ஆட்சிக்கு வந்து மெரட்ட போறாங்கன்னு பாக்கறீங்களா!
அவனுங்க உலகத்துல எந்த மூலைக்கு போனாலும் கடைசியா போகப்போறது புழலுக்கு தான்!
14. Re:... posted byVilack sma (jeddah)[11 May 2015] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40503
100 கோடி ரூபாய் அபராதம் என்பது , அந்த குற்றத்தின் தன்மையை அறிந்து வழங்கப்பட்டதுதானே ! .அப்படியிருக்க , எல்லாவற்றையும் தள்ளுபடி செய்கிறேன் என்றால் , 100 கோடி என்று சொன்னவர் நகைப்புக்குரியவரா ? . நமது தேசத்தின் நீதித்துறையும் அப்படித்தான் உள்ளது .
முன்பொருமுறை , எனக்கு வயதாகி விட்டது , நீதி மன்றத்திற்கு என்னால் நடக்க முடியாது என்று சொல்லி , நீங்கள் வேண்டுமானால் என் வீட்டிற்கு வந்து என்னை விசாரியுங்கள் என்றார் ஒருவர் . நீதிமன்றமும் வீட்டிற்கே வந்தது . கேட்ட கேள்விகளுக்கெல்லாம் தெரியாது என்ற ஒருசொல் பதில் .
நீதி மன்றத்தையே எள்ளிநகையாடினார்கள் .
பசிக்காக திருடியவன் உள்ளே , சொகுசுக்காக திருடியவன் வெளியே , ஏனெனில் இது பாரத தேசம் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross