அண்மையில் வெளியான ப்ளஸ் 2 தேர்வு முடிவுகளின் படி, காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி மாணவர் அஹ்மத் நியாஸ் அரபி மொழி பாடத்தில் 200க்கு 194 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றிருந்தார். இவர் பெற்ற மதிப்பெண்கள் விபரம்:-
அரபி - 194
ஆங்கிலம் - 166
இயற்பியல் - 181
வேதியல் - 167
உயிரியல் - 149
கணிதம் - 199
மொத்தம் – 1056.
அதே 194 மதிப்பெண்களைப் பெற்று, சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளியின் மாணவியர் முஹம்மத் ஃபாத்திமா, ஆமினா ஆகியோர் இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்றனர். மாணவ-மாணவியரின் மொத்த மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்பட்டு, அதனடிப்படையில் தரம் பிரிக்கப்பட்டுள்ளது.
அரபியில் மாநிலத்தின் முதல் மாணவரான அஹ்மத் நியாஸை, அவர் பயின்ற எல்.கே.மேனிலைப்பள்ளி தலைமையாசிரியர் எம்.ஏ.எஃப்.செய்யித் அஹ்மத் இனிப்பூட்டிப் பாராட்டினார். பள்ளியின் ஆட்சிக்குழு உறுப்பினர் எல்.கே.லெப்பைத்தம்பி உள்ளிட்டோர் இதன்போது உடனிருந்தனர்.
இதுகுறித்து மாணவர் அஹ்மத் நியாஸ் தெரிவித்ததாவது:-
இச்செய்தி எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளித்துள்ளது... அரபியில் மாநில அளவில் முதலிடம் பெறுவேன் என்று நான் எதிர்பார்க்கவேயில்லை...
எனது தந்தை சென்னையில் கூலி வேலை பார்க்கிறார். குடும்பத்தின் பொருளாதாரச் சூழல் காரணமாக நான் எனது மேற்படிப்பு பற்றி பெரிய அளவில் சிந்திக்கவில்லை. ஆனால் இப்போது பொறியியல் படிக்க வேண்டும் என்று ஆவலுள்ளது. போதிய பொருளாதார உதவி கிடைத்தால் நன்றாகப் படித்து, என் குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் உதவியாக இருக்க நாடுகிறேன்...
இவ்வாறு அவர் கூறினார்.
ப்ளஸ் 2 தேர்வு முடிவுகளின் படி, அதே எல்.கே.மேனிலைப்பள்ளி மாணவர் - திருச்செந்தூரைச் சேர்ந்த எஸ்.லெட்சுமி நாராயணன் 1200க்கு 1162 மதிப்பெண்கள் பெற்று, காயல்பட்டினம் நகரளவில் முதலிடம் பெற்றிருந்தார். அவரையும், பள்ளி தலைமையாசிரியர் மற்றும் நிர்வாகிகள் பாராட்டினர்.
|