வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் வாங்கிய வழக்கில் குற்றவாளிகள் என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் 3 பேருக்கு - தண்டனை வழங்கி - பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், செப்டம்பர் 27 அன்று தீர்ப்பு வழங்கியது.
அத்தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனு மீதான முடிவு இன்று காலை பெங்களூரில் உள்ள கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் நீதிபதி குமாரசாமியால் வழங்கப்பட்டது. அதில் - ஜெயலலிதா குற்றவாளி அல்ல என தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதனையடுத்து, காயல்பட்டினம் நகர அதிமுகவினர் இன்று காலை 11.30 மணியளவில், பேருந்து நிலையம் அருகில், நகர துணைச் செயலாளர் கே.ஏ.ஷேக் அப்துல் காதிர் தலைமையில் பட்டாசு வெடித்து கொண்டாடினர். நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.
காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர்களான ஜெ.அந்தோணி, எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், அதிமுக மூத்த உறுப்பினர்களான எஸ்.ஏ.முகைதீன், செந்தமிழ்ச் செல்வன், நகர பொருளாளர் ஜின்னா, எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் எஸ்.ஏ.சாக்ளா, ஜெயலலிதா பேரவை புரட்சி சங்கர், செய்தகமது, படையப்பா கசாலி, ஏ.எஸ்.முகைதீன், வார்டு செயலாளர்களான எம்.எல்.இல்யாஸ், எஸ்.முத்து, எஸ்.ஆறுமுக நெயினார், எம்.இ.எல்.புகாரீ, சாவன்னா, ஹமீது, நோனா ஜாஃபர், மாஸ்டர் மற்றும் கட்சியினர் இதில் கலந்துகொண்டனர். |