காயல்பட்டினத்தில், இம்மாதம் 10ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை துவங்கி, இன்று நண்பகல் வரை மழை பெய்துள்ளது.
இன்று அதிகாலையில் சாரலில் துவங்கி, 10.00 மணியளவில் இதமழையாக தொடர்ந்து பெய்து, 13.30 மணியளவில் ஓய்துள்ளது.
காலை முழுக்க இருண்டிருந்த வானம், 14.50 மணி நிலவரப்படி வெளிச்சமாக உள்ளது. வெயில் இல்லை. வானிலை இதமாக உள்ளது. பொன்விழா கால்பந்துப் போட்டி நடைபெறும் ஐக்கிய விளையாட்டு சங்கம் உட்பட நகரின் பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் தேங்கிக் காணப்படுகிறது.
நேற்று பெய்த மழை காரணமாக, ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் நேற்று நடைபெறவிருந்த ஆட்டம் இன்றைய தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. தற்போது மைதானத்தில் மழை நீர் உடனடியாக வற்றாத அளவுக்குத் தேங்கியிருப்பதால், இன்று மாலையில் கால்பந்துப் போட்டிய நடத்திட மாற்று இடம் பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
படங்களில் உதவி:
’PHM’ ஷேக்னா
மழை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
ஐக்கிய விளையாட்டு சங்கம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |