காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃபின் 88ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள், 19.04.2015 ஞாயிற்றுக்கிழமை 19.00 மணிக்கு திக்ர் மஜ்லிஸுடன் துவங்கியது.
ரஜப் மாதம் முழுவதும் ஒவ்வொரு நாளும் அதிகாலையில் ஸஹீஹுல் புகாரீ கிரந்தத்திலிருந்து நபிமொழிகள் ஓதப்பட்டு, காலை 09.15 மணியளவில் அன்றைய நாளில் ஓதப்பட்ட நபிமொழிகளுக்கு மார்க்க அறிஞர்களால் விளக்கவுரை வழங்கப்படுவது வழமை.
ரஜப் 22 அன்று (மே 12ஆம் நாள்) மஹான் ஸாம் ஷிஹாபுத்தீன் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் நினைவு நாள் ஆகையால், அன்னவர்களது வாழ்க்கைச் சரித உரையை - தூத்துக்குடி முத்து கதீஜா பள்ளியின் இமாம் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.ரஹ்மத்துல்லாஹ் ஃபாஸீ வழங்கினார். அன்று ஓதப்பட்ட நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, குளச்சல் ஜமாஅத் பள்ளியின் தலைமை இமாம் மவ்லவீ அப்துஸ்ஸலாம் ஜமாலீ வழங்கினார்.
திருமண முறிவு ‘தலாக்’ தொடர்பான சட்டங்கள், ‘தலாக்’ தொடர்பாக சதி உலகத்தின் பரப்புரைகளும் – இஸ்லாமின் உண்மை நிலைகளும் உள்ளிட்ட தகவல்களை உள்ளடக்கி அவரது உரை அமைந்திருந்தது..
ரஜப் 23ஆம் நாள் (மே 13) ஓதப்படும் நபிமொழிகளுக்கான விளக்கவுரையை - மேலப்பாளையம் உதுமானிய்யா அரபிக்கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் பீ.ஏ.காஜா முஹ்யித்தீன் பாக்கவீ வழங்குகிறார்.
ஒவ்வொரு நாளும் நடைபெறும் சொற்பொழிவு நிகழ்ச்சிகள், http://www.bukhari-shareef.com/eng/live/ என்ற வலைதள பக்கத்தில் ஒலி நேரலை செய்யப்படுகிறது.
மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் 1436ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் 1435ஆம் ஆண்டு (கடந்தாண்டு) 22ஆம் நாள் நிகழ்ச்சிகள் தொடர்பான செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |