காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃபின் 88ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள், 19.04.2015 ஞாயிற்றுக்கிழமை 19.00 மணிக்கு திக்ர் மஜ்லிஸுடன் துவங்கியது.
ரஜப் மாதம் முழுவதும் ஒவ்வொரு நாளும் அதிகாலையில் ஸஹீஹுல் புகாரீ கிரந்தத்திலிருந்து நபிமொழிகள் ஓதப்பட்டு, காலை 09.15 மணியளவில் அன்றைய நாளில் ஓதப்பட்ட நபிமொழிகளுக்கு மார்க்க அறிஞர்களால் விளக்கவுரை வழங்கப்படுவது வழமை.
ரஜப் 23 அன்று (மே 13ஆம் நாள்) ஓதப்பட்ட நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, மேலப்பாளையம் உதுமானிய்யா அரபிக்கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் பீ.ஏ.காஜா முஹ்யித்தீன் பாக்கவீ வழங்கினார்.
உணவுத் தேவைகளுக்காக பிராணிகளை அறுப்பதன் சட்டங்கள், உணவில் ஹலால் (அனுமதிக்கப்பட்டவை) - ஹறாம் (விலக்கப்பட்டவை) குறித்து பிரித்தறிய வேண்டியதன் அவசியம், தற்கால உணவுப் பொருட்களிலுள்ள குளறுபடிகள், நோய் நிவாரணத்திற்காக நபிகளார் கற்றுத் தந்த பிரார்த்தனைகள் உள்ளிட்ட தகவல்களை உள்ளடக்கி அவரது உரை அமைந்திருந்தது.
ரஜப் 24ஆம் நாள் (மே 14) ஓதப்படும் நபிமொழிகளுக்கான விளக்கவுரையை - மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.எஸ்.முஹம்மத் லெப்பை பாக்கவீ, சீர்காழி புத்தூர் மஸ்ஜிதுத் தக்வா பள்ளியின் இமாம் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எல்.ஹாமிதுல்லாஹ் ஃபாஸீ ஆகியோர் வழங்குகின்றனர்.
ஒவ்வொரு நாளும் நடைபெறும் சொற்பொழிவு நிகழ்ச்சிகள், http://www.bukhari-shareef.com/eng/live/ என்ற வலைதள பக்கத்தில் ஒலி நேரலை செய்யப்படுகிறது.
மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் 1436ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் 1435ஆம் ஆண்டு (கடந்தாண்டு) 23ஆம் நாள் நிகழ்ச்சிகள் தொடர்பான செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |