காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃபின் 88ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள், 19.04.2015 ஞாயிற்றுக்கிழமை 19.00 மணிக்கு திக்ர் மஜ்லிஸுடன் துவங்கியது.
ரஜப் மாதம் முழுவதும் ஒவ்வொரு நாளும் அதிகாலையில் ஸஹீஹுல் புகாரீ கிரந்தத்திலிருந்து நபிமொழிகள் ஓதப்பட்டு, காலை 09.15 மணியளவில் அன்றைய நாளில் ஓதப்பட்ட நபிமொழிகளுக்கு மார்க்க அறிஞர்களால் விளக்கவுரை வழங்கப்படுவது வழமை.
ரஜப் 24 அன்று (மே 14ஆம் நாள்), ஓதப்பட்ட நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.எஸ்.முஹம்மத் லெப்பை பாக்கவீ, சீர்காழி புத்தூர் மஸ்ஜிதுத் தக்வா பள்ளியின் இமாம் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எல்.ஹாமிதுல்லாஹ் ஃபாஸீ ஆகியோர் வழங்கினர்.
ரஜப் 25ஆம் நாள் (மே 15) அன்று ஸஹீஹ் முஸ்லிம் நபிமொழிக் கிரந்தத்தைத் தொகுத்தளித்த இமாம் முஸ்லிம் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் நினைவு விசேஷ நாளாகும். அன்னவர்களின் வாழ்க்கைச் சரித உரையை, கேரள மாநிலம் குட்டிகாட்டூர் ஜாமிஆ ஆரிஃபிய்யா அன்வாரிய்யா அரபிக் கல்லூரியின் ஹிஃப்ழுப் பிரிவு ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் என்.கே.காஜா முஹ்யித்தீன் மஸ்லஹீ வழங்குகிறார். அன்று ஓதப்படும் நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, கூத்தாநல்லூர் அரபிக் கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் ஓ.எல்.நூஹ் ஸிராஜுத்தீன் பாக்கவீ ஆகியோர் வழங்குகின்றனர்.
ஒவ்வொரு நாளும் நடைபெறும் சொற்பொழிவு நிகழ்ச்சிகள், http://www.bukhari-shareef.com/eng/live/ என்ற வலைதள பக்கத்தில் ஒலி நேரலை செய்யப்படுகிறது.
மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் 1436ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் 1435ஆம் ஆண்டு (கடந்தாண்டு) 24ஆம் நாள் நிகழ்ச்சிகள் தொடர்பான செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |