காயல்பட்டினத்தில் நேற்று (மே 14 வியாழக்கிழமை) சிறிய அளவில் சாரல் மழை பெய்தவண்ணம் இருந்தது. எனினும் வெயிலும் கடுமையாக இருந்ததால் வானிலை வெப்பமயமாக இருந்தது.
இந்நிலையில், இன்று 11.00 மணியளவில் மீண்டும் கருமேகங்கள் திரண்டு, வானம் இருண்டு காணப்பட்டது. 13.00 மணியளவில், திடீரென இதமழை பெய்யத் துவங்கியது. சுமார் 1 மணி நேரம் இம்மழை நீடித்து, 14.00 மணியளவில் ஓய்ந்தது.
ஜும்ஆ தொழுகை நடைபெற்றுக்கொண்டிருந்தபோது மழை துவங்கியதால், குடை உள்ளிட்ட முன்னேற்பாடுகள் இன்றி வந்த பொதுமக்கள் வேகவேகமாக பள்ளிவாசலை விட்டும் வீடுகளுக்குத் திரும்பிச் சென்றனர்.
இன்று பெய்த மழை காரணமாக, காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் மழை நீர் தேங்கியதால், இன்றைய போட்டி மீண்டும் வாவு வஜீஹா வனிதையர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
மழை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |