காயல்பட்டினம் தேங்காய் பண்டக சாலையில் குடும்பத்துடன் வசிப்பவர் ஜெயச்சந்திரன். இவரது உறவினர் புதியம்புத்தூர் அருகே உள்ள சாமிநத்தத்தை சேர்ந்த முத்துராஜ் (26). கூலித் தொழிலாளி. இவருக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இதன் பின்பு முத்துராஜ் இங்கு ஜெயச்சந்திரன் வீட்டில் தங்கியிருந்து வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் இவர், இம்மாதம் 15ஆம் நாள் வெள்ளிக்கிழமை 22.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் தாயிம்பள்ளிவாசல் பகுதி ஒருவழிப்பாதை வழியாக வீட்டுக்குத் திரும்பி கொண்டிருந்தார்.
அப்போது எதிரே மதுரையிலிருந்து திருச்செந்தூர் நோக்கி வேகமாக வந்த அரசு பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட முத்துராஜ் தலையில் பலத்த காயம் அடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆறுமுகநேரி காவல் ஆய்வாளர் (பொறுப்பு) சோமசுந்தரம் மற்றும் காவலர்கள் அங்கு விரைந்து சென்று, முத்துராஜின் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்த வழக்கில் அரசுப் பேருந்து ஓட்டுநரான தூத்துக்குடி ரத்தினபுரத்தைச் சேர்ந்த குகன் (42) என்பவர் கைது செய்யப்பட்டார்.
1. இந்த முனையிலும் தூரக்குழி கண்ணாடி தேவை! posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu)[17 May 2015] IP: 128.*.*.* Romania | Comment Reference Number: 40623
தாயும்பள்ளி ஒருவழிப்பாதை வழியாக தாயும்பள்ளி முனை சந்திப்பை கடக்கும்பொழுது நின்று நிதானமாக இருபக்கமும் பார்க்க வேண்டியது வாகன ஓட்டியின் கடமை,அதிலும் இந்த வழியே வரும் பொழுது தாங்கள் வரும் வழியே சாலை விதியை மீறி தவறான பாதையில் வந்திருப்பது ஆகும்! இப்படித்தான் இந்த செய்தியை அனுமானமாக நானறிகிறேன்!
நானறிந்தவரை இந்த முனை மிக, பயங்கரமான விபத்துக்களை சந்திப்பதோடு மட்டுமல்ல இது இரண்டாவது உயிர்பலி விபத்தென்று நினைக்கிறேன்! முதற்பலி பரிமார் தெருவைச் சேர்ந்த சகோதரர் கஸ்ஸாலி அவர்கள் ஆகும்!
அடுத்து இதே இடத்தில் ஒரு பயங்கர விபத்து நடைபெற்று
மையிரிலையில் உயிர்தப்பிய என்னாருயிர் நண்பன் சலீமின் தகப்பனார் மர்ஹூம் பாதுல் அஷாப் ஹாஜி அவர்கள் ஆவார்கள்!
ஆக என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் இந்த முனையிலும் தூரக்குழி கண்ணாடியை பொருத்துமாறு தன்னார்வு தொண்டு சகோதரர்களை கனியுடன் கேட்டு கொள்கிறேன்! அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
2. போக்குவரத்து துறை இதில் கவனம் செலுத்துமா? posted byN.S.E.மஹ்மூது (ரியாது – சவுதி அரேபியா)[17 May 2015] IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40624
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
விபத்தில் இறந்தவரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள் – இறந்தவரின் குடும்பத்தினருக்கு இறைவன் பொறுமையைக் கொடுத்தருள வேண்டுகிறேன்.
---------------------------------
வாகனங்கள் விபத்திற்குள்ளாவதற்கு மிக, முக்கிய காரணம் இரு தரப்பினரிடமும் ஏற்படும் அஜாக்கிறதை , அடுத்ததாக பெரிய வாகனங்களை ஓட்டுபவர்களில் பெரும்பாலோர் திமிராகவே ஓட்டுவர் – அருகிலோ, எதிரிலோ வரும் வாகனங்கள் நம்ம பெரிய வாகனத்தைப் பார்த்ததும் பயந்து, ஒதுங்கி, ஓரங்கட்ட வேண்டும் என்ற எண்ணம்.
ஒருவேளை நாம் மோதி விபத்து ஏற்பட்டாலும் நமக்கு ஒன்றும் ஆகப்போவதில்லை என்ற மதமதப்பு – இந்த மதமதப்பே பெரும்பாலான விபத்திற்கு காரணம்.
இப்படி எழுதுவதால் இந்த விபத்திற்கு முழு காரணம் இந்த ஓட்டுனர்தான் என்று சொல்லவரவில்லை. நாட்டு நடப்பைத்தான் எழுதுகிறேன்.
இப்படி அஜாக்கிரதையாக ஓட்டி விபத்தை ஏற்படுத்துபவர்களுக்கு கடுமையான தண்டனையை பாரபட்சமின்றி கொடுக்க வேண்டும். அப்போதுதான் கோரவிபத்துகள் ஏற்படாமல் தடுக்க முடியும்.
------------------------------------
அடுத்ததாக இருசக்கர வாகனங்கள் ஓட்டுபவர்களிலும் பெரும்பாலும் அஜாக்கிரதையை பார்க்கலாம் – நம்ம வாகனம் சிறியதுதானே முன்னால போகிற வாகனத்தை முந்திவிடலாம் என்ற நினைப்பில் முந்த முயன்று விபத்திற்குள்ளாவர்.
நாட்டிலே ஏற்படுகிற விபத்துகளில் இருசக்கர வாகன விபத்தில்தான் மரணங்கள் அதிகம் – காரணம் அதிவேகமாக ஓட்டுவது, முன்னாலே போகிறவரை நாம் முந்துகிறபோது அவர் வேகத்தை கூட்டவோ, குறைக்கவோ செய்தால் விபத்து ஏற்படுமே! என்ற எண்ணத்தை மனதில் கொள்ளாமல் ஓட்டி முந்துகிறதால்தான் பல விபத்துகளில் கோர மரணங்கள் ஏற்படுகிறது.
இப்படி எழுதுவதால் இந்த விபத்தில் இறந்தவர் தவறு செய்திருப்பாரோ! என்று எண்ணக்கூடாது. நாட்டு நடப்புகளைத்தான் எழுதுகிறேன்.
-------------------------------------
மொத்தத்தில் போக்குவரத்துத் துறை கண்டிப்புடன் இருந்து – 18 வயதுக்கு குறைந்தவர்கள் வாகனம் ஓட்டுவதை தடுத்தும், உரிமம் இல்லாமல் ஓட்டுபவர்களையும், ஒழுங்கற்ற முறையில் வாகனம் ஓட்டுபவர்களையும் பிடித்து சரியான தண்டனையை கொடுத்தால் பெரும்பாலான விபத்துகள் குறையும்.
போக்குவரத்து துறை இதில் கவனம் செலுத்துமா? பொருத்திருந்து பார்ப்போம்.
3. Re:... posted byசாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் (அல்கோபார்)[17 May 2015] IP: 95.*.*.* Romania | Comment Reference Number: 40627
மிகவும் வருத்தமான நிகழ்வு.
மறைந்த சகோதரரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
விபத்து என்பது ஒரு சிறிய கவனக்குறைவின் வெளிப்பாடு. நாம் சரியாக சென்றாலும் அடுத்தவர் செய்யும் சிறு தவறால் விபத்து உண்டாகி உயிர் பலி நடைபெறுகிறது
ஒருமுறை கல்லூரி விடுமுறையில், திருச்சியில் இருந்து வீடு வர, பேருந்து கிடைக்காததால் ஒரு லாரியில் ஏறி வந்தேன். இரவு நேரம், மதுரை வரை வருவதற்குள் 'மலக்குல் மொவ்த்' பல முறை எங்களை நெருங்கி வந்து சென்றார்.
லாரி ஓட்டுனரும் கிளீனரும் பயங்கர போதை. கண்கள் எல்லாம் சிவந்து வார்தைகள் குளறிக்கொண்டே இருந்தது. எதிரில் வரும் எந்த வண்டியையும் சட்டை செய்வதே இல்லை. யாருக்கும் வழி விடவோ, முகப்பு லைட்டை டிம் செய்வதோ இல்லை.
இவ்வளவு போதையில் எப்படியப்பா வண்டி ஓட்டுறீங்க என்று கேட்டதும்..!!..??
தம்பி இது எல்லாம் சர்வ சாதாரணமாப்பா..!! எங்களுக்கு ரோட்டின் நடுவில் போட்டு இருக்கும் கோடுகள் தான் கணக்கு. எனக்கு முன்னாடி அந்த கோடுகள் ஓடிக்கொண்டு இருந்தால் போதும், சரியாக போயி விடுவோம்.
சில இடங்களில் கோடுகள் இருக்காது, அப்போ அரை தூக்கத்தில் இருந்து கொஞ்சம் விழித்துக் கொள்ளுவோம் என்று ரோட்டின் நடுவையும் தாண்டி வண்டி ஓடிக்கொண்டே இருந்தது.
அன்று முதல், எதிரில் எந்த கனரக வாகனம் வந்தாலும் கூடுதல் கவனம் வந்து விடும்.
வல்ல அல்லாஹ் நம் அனைவர்களையும் ஆபத்துகளில் இருந்து காப்பானாக.
4. Re:... posted bynizam (india)[19 May 2015] IP: 216.*.*.* United States | Comment Reference Number: 40636
இதை ஒட்டுமொத்த திருச்செந்தூர் காயல்சலையின் ஒருபகுதியாகவே பார்க்க வேண்டும் அந்த அடிப்படையில் பல விபத்துக்கள் இந்த வருடத்தில் நடந்துள்ளன முன்பு ஒரு வாசகர் குறிப்பிட்டதுபோல பெரிய வாகனத்தை ஓட்டுபவர்கள் மிக திமிரா ஓட்டுகிறார்கள் மிக முக்கியமாக மொகுதூம் பள்ளி தாயிஇம் பள்ளி அருகில் எச்சரிக்கை பலகையுடன் கூடிய வேகத்தடை மிக அவசியம், இதை YUF போன்ற பொறுப்புணர்ச்சி கொண்ட அமைப்புகள் வலியுருத்துனால் இந்த துயரம் தொடர்வது எதிர்காலத்தில் தடுக்க படும்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross