காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃபின் 88ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள், 19.04.2015 ஞாயிற்றுக்கிழமை 19.00 மணிக்கு திக்ர் மஜ்லிஸுடன் துவங்கியது.
ரஜப் மாதம் முழுவதும் ஒவ்வொரு நாளும் அதிகாலையில் ஸஹீஹுல் புகாரீ கிரந்தத்திலிருந்து நபிமொழிகள் ஓதப்பட்டு, காலை 09.15 மணியளவில் அன்றைய நாளில் ஓதப்பட்ட நபிமொழிகளுக்கு மார்க்க அறிஞர்களால் விளக்கவுரை வழங்கப்படுவது வழமை.
ரஜப் 28 அன்று (மே 18ஆம் நாள்) அன்று ஓதப்பட்ட நபிமொழிகளுக்கான விளக்கவுரையையும், புனிதர் புகாரீ இமாம் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் வாழ்க்கை வரலாற்றுச் சரித உரையையும், மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.பி.ஹுஸைன் மக்கீ மஹ்ழரீ வழங்கினார்.
மரணத்தின்போதான நிகழ்வுகள், நல்ல மரணம் - கெட்ட மரணம் பற்றிய விபரங்கள், நல்லோர் - கெட்டோர் நிலை, மண்ணறை - மறுமை வாழ்க்கை முறைகள் குறித்த தகவல்கள் அவரது உரையில் இடம்பெற்றிருந்தன.
ரஜப் 29ஆம் நாள் (மே 19) அன்று, இமாம் ஷாஃபிஈ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் நினைவு நாளாகும். இமாம் அவர்களின் வாழ்க்கைச் சரித உரையையும், அன்று ஓதப்படும் நபிமொழிகளுக்கான விளக்கவுரையையும், காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளியின் கத்தீபும், முஅஸ்கர் மகளிர் அரபிக் கல்லூரிகளின் நிறுவனருமான மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ வழங்குகிறார்.
ஒவ்வொரு நாளும் நடைபெறும் சொற்பொழிவு நிகழ்ச்சிகள், http://www.bukhari-shareef.com/eng/live/ என்ற வலைதள பக்கத்தில் ஒலி நேரலை செய்யப்படுகிறது.
மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் 1436ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் 1435ஆம் ஆண்டு (கடந்தாண்டு) 28ஆம் நாள் நிகழ்ச்சிகள் தொடர்பான செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |