காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃபின் 88ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள், 19.04.2015 ஞாயிற்றுக்கிழமை 19.00 மணிக்கு திக்ர் மஜ்லிஸுடன் துவங்கியது.
ரஜப் மாதம் முழுவதும் ஒவ்வொரு நாளும் அதிகாலையில் ஸஹீஹுல் புகாரீ கிரந்தத்திலிருந்து நபிமொழிகள் ஓதப்பட்டு, காலை 09.15 மணியளவில் அன்றைய நாளில் ஓதப்பட்ட நபிமொழிகளுக்கு மார்க்க அறிஞர்களால் விளக்கவுரை வழங்கப்படுவது வழமை.
ரஜப் 29 அன்று (மே 19ஆம் நாள்) இமாம் ஷாஃபிஈ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் நினைவு விசேஷ நாளாகும். அன்று ஓதப்பட்ட நபிமொழிகளுக்கான விளக்கவுரையையும், புனிதர் புகாரீ இமாம் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் வாழ்க்கை வரலாற்றுச் சரித உரையையும், காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளியின் கத்தீபும், முஅஸ்கர் மகளிர் அரபிக் கல்லூரிகளின் நிறுவனருமான மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ வழங்கினார்.
ஷஃபான் 01ஆம் நாள் (மே 20) அன்று, இவ்வாண்டின் (88ஆம் ஆண்டு) நிறைவு நாளாகும். அதிகாலை ஃபஜ்ர் தொழுகைக்குப் பின், ஹாஃபிழ் எஸ்.எம்.எஸ்.மஹ்மூத் ஹஸன் கிராஅத் ஓத, ஸஹீஹுல் புகாரீ கிரந்தத்தின் நிறைவுப் பகுதியை, மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப், குருவித்துறைப் பள்ளியின் தலைவர் நஹ்வீ இ.எஸ்.செய்யித் முஹம்மத் புகாரீ ஆலிம் ஓதி துவக்கி வைக்கிறார்.
ஓதப்படும் நபிமொழிகளுக்கு, காலை 08.45 மணிளவில், மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.ஹபீபுர்ரஹ்மான் மஹ்ழரீ விளக்கவுரையாற்ற, ஐக்கிய சமாதானப் பேரவையின் தலைவர் மவ்லவீ டீ.எம்.என்.ஹாமித் பக்ரீ மன்பஈ - “கூட்டு துஆவின் சிறப்புகள்” எனும் தலைப்பில் உரையாற்றுகிறார். மவ்லவீ ஹாஃபிழ் முஹம்மத் இஸ்மாஈல் ஸக்காஃபீ மலையாளத்தில் உரையாற்றுகிறார்.
நிறைவாக, புனித மக்கா ஷரீஃப் முஃப்தீ மவ்லானா செய்யித் அஹ்மதிப்னு ஜெய்னீ தஹ்லான் அவர்களால் தொகுக்கப்பட்ட கத்முல் புகாரி ஷரீஃப் எனும் அபூர்வ துஆ பிரார்த்தனையை, ‘அல்அஸ்ரார்’ மாத இதழின் சிறப்பாசிரியர் மவ்லவீ நஹ்வீ ஏ.எம்.முஹம்மத் இப்றாஹீம் ஓதி நிறைவு செய்கிறார். அதனைத் தொடர்ந்து மாலையிலும், இரவிலும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
அனைத்து நிகழ்ச்சிகளுக்குமான ஏற்பாடுகளையும், மஜ்லிஸுல் புகாரி ஷரீஃபின் நிர்வாகிகளும், வைபவக் கமிட்டியினரும் செய்து வருகின்றனர்.
அபூர்வ துஆ பிரார்த்தனை, http://www.bukhari-shareef.com/eng/live/ என்ற வலைதள பக்கத்தில் ஒலி நேரலை செய்யப்படுகிறது.
மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் 1436ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் 1435ஆம் ஆண்டு (கடந்தாண்டு) 29ஆம் நாள் நிகழ்ச்சிகள் தொடர்பான செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |