என்றாவது ஒருநாள்தான் இங்குள்ள குப்பைகள் நகராட்சியால் அள்ளிச் செல்லப்படுவதாகவும், அதுவரை தெருவே நாற்றக்கேடாகத்தான் காட்சியளிக்கிறது என்றும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
தகவல் & படங்கள்:
’AKM ஜுவல்லர்ஸ்’ Y.M.முஹம்மத் தம்பி
இதே நிலை பல தெருக்களிலும் - குறிப்பாக காயல்பட்டினம் கடற்கரையிலும் நீடிக்கிறது.
இது ஒருபுறமிருக்க, திருமண வீடுகளில் விருந்துக்கு பெரும்பாலும் ப்ளாஸ்டிக் கோப்பைகளே பயன்படுத்தப்படுவதும், தற்போது நகரில் திருமண சீஸன் என்பதால், அத்திருமண வீடுகளின் சார்பில் தேங்கும் மொத்தக் கழிவுகளையும் பொதுநலனில் எவ்வித அக்கறையுமின்றி இதுபோன்ற இடங்களிலேயே திருமண வீட்டார் கொட்டுவதும் - நகரில் யாராலும் கண்டுகொள்ளப்படாத வழமையாகிவிட்டமை குறிப்பிடத்தக்கது.
1. Re:... posted byvilack sma (jeddah)[21 May 2015] IP: 5.*.*.* | Comment Reference Number: 40663
குப்பை தேங்கி கிடக்கிறது எனபது அந்தந்த வார்டு உறுப்பினர்களின் சுறுசுறுப்பை காட்டுகிறது .
திருமண விருந்துகளின்போது ஏற்படும் குப்பைகள்பற்றி நான் முன்பு ஒரு கருத்துபதிவில் எழுதி இருந்தேன் . திருமண வீட்டாருக்கு நகரின் சுகாதாரம் , சுத்தம் போன்றவற்றில் அக்கறை இல்லை என்றுதான் கூற வேண்டும் . பல லட்சங்கள் செலவு செய்து விருந்து வைப்பார்கள் . விருந்து முடிந்தபின் சில நூறு ரூபாய்கள் கொடுத்து அந்த இடத்தை சுத்தம் செய்வோமே என்ற மனப்பான்மை ஒருவருக்கும் இல்லை .
நகராட்சியும் , விருந்து நடக்கும் பள்ளிவாசல்கள் மற்றும் திருமண மண்டபங்கள் இதற்கு தீர்வு காணலாம் . நகராட்சி விருந்து நடக்கும் இடத்திற்கு வரி விதித்து அந்த இடத்தை சுத்தம் செய்யலாம் . அல்லது பள்ளிவாசல்கள் , திருமண மண்டபங்கள் தாங்கள் நிர்ணயிக்கும் வாடகை தவிர சுத்தம் செய்வதற்கும் தனியாக ஒரு தொகை நிர்ணயித்து வசூல் செய்யலாம் . ஏனெனில் திருமண வீட்டுகாரர்கள் இந்த வேலையை செய்ய மாட்டார்கள் . தங்கள் வேலை முடிந்ததும் வெளியேறவே செய்வார்கள் .
சுத்தம் சோறு போடும் , குழம்பு ஊத்தும் போன்ற பொன்மொழிகளை சொல்லிகொண்டிருப்பதில் அர்த்தமே இல்லை .
2. உள்ளத்தூய்மையின் பிம்பமே ஊர்தூயமை!.. posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu)[21 May 2015] IP: 128.*.*.* Romania | Comment Reference Number: 40665
பரிமார் தெருவில் காணும் காட்சி,கல்யாண வீட்டின் கழிவுகளல்ல, என்றென்றும் காணக்கூடிய கண்காட்சியாகும்!
10-வது வார்டு உறுப்பினர்தான் ஓரளவு உண்மையான உதவி எண்ணத்துடன் உழன்று வருவதாக் கேள்விபட்டேன்
இப்போ அவரும் ஐய்க்கியமாகி விட்டாரா? ஹைர்!
அம்மாவை அட்டகாசமாக ஆட்காட்டி விரல்காட்டி வீர வசனம் பேசி வார்த்தைகள் கொட்டிய வீராதி வீரர், தன் பகுதி வார்டின் அவலத்தையும் அகற்ற வேண்டுமல்லவா? அதுதானே வீரத்தனம்,உண்மைத்தனம் வேறெவருக்கும் விலைபோகா பொதுமைத்தனம்!
அடுத்து,அன்பு காயல் சகோதர சகோதிரிகளே இது நம்மூர், நம்தெரு நம் வீட்டருகேயுள்ள பகுதி.அதை சுத்தமுடன் வைக்கவேண்டியது நம் கடமை.அண்டை வீட்டுக்காரன், எதிர்வீட்டுக்காரன் எல்லாம் ஏனோதானோவென்று குப்பைகளை வீசுகிறானே என்று ஆதங்கப்பட்டு நாமும் அதே தவறை செய்யலாகாது! .
நாம் சரியாக செய்வோம்,செய்வோம் அதை பார்த்தாவது ஒருநாள் அவமானமடைந்து அவர் திருந்துவார்.எல்லோர் கைகளும் இணைந்தால் இமயத்தைக்கூட இலேசாக அசைக்கலாம் என்பது முன்னோர்களின் முதுமொழி. தெண்டித்திடுவொம்-தூய்மை நகரமாய் திகழ்ந்திடச்செய்வோம்! அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்! .
3. Re:...புகைப்படம் எடுத்து பிரதமருடன் நிற்க ஏற்பாடு செய்ய முடியுமா posted bymackie noohuthambi (kayalpatnam)[21 May 2015] IP: 180.*.*.* India | Comment Reference Number: 40670
பிரதமருடன் நின்று புகைப்படம் எடுக்க யாராவது ஏற்பாடு செய்தால் எல்லோரும் வரிசையாக துடைப்பத்துடன் தூய்மை இந்தியா என்ற போர்டுடன் சுத்தம் செய்ய தயாராக இருப்பார்கள். அப்படி ஏதாவது ஏர்பாடு செய்வோமா...
அட.... இப்போதுதான் மக்களின் முதல்வர் தமிழகத்தின் முதல்வராக முடி சூடப் போகிறாரே....அவருடன் நெருங்கி வரும் மோடியுடன் புகைப் படம் எடுத்தால் என்ன முதல்வருடன் எடுத்தால் என்ன அதையாவது செய்யுங்களேன்..நமது நகரமன்ற தலைவி கூட முதல்வருடன் நெருக்கமானவர்தானே...அவர் கூட இந்த ஏற்பாட்டை செய்யலாமே,,,,
சுத்தம் சோறு போடும் என்று சொல்ல வேண்டாம் சுத்தம் ஈமானில் பாதி என்று சொல்லுங்கள். சுத்தத்தை பற்றி நபிகள் நாயகம் சொல்கின்ற எவ்வளவோ செய்திகள் இருக்கிறது...5 வேளை தொழுகைக்கே ஒவ்வொரு முறையும் ஒழு செய்வது அந்த சுத்தத்தைவலியுறுதத்தானே.....
நகராட்சி ஊழியர்கள் வேலையை கவனமாக செய்பவர்களாக இருந்திருந்தால் இத்தனை குப்பைகள் தேங்கிக் கிடக்க வாய்ப்பே இல்லை – அவர்களின் கவனக்குறைவே இதற்கு காரணம் எனலாம்.
இல்லை இந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் எங்கே போய், யாரிடம் புகார் செய்யப்போகிறார்கள் என்ற தப்பாண எண்ணத்தில் தங்கள் கடமையை செய்ய மறுக்கின்றார்களா?
இந்த இடத்தில் ஏன் ஒரு குப்பைத் தொட்டியை வைக்ககூடாது ? அல்லது இதற்கு முன்பு ஒன்று இருந்திருந்தால் அது என்னவாயிற்று?
குப்பையை அள்ளிச் செல்கின்றவர்கள் மட்டுமல்ல அதை மேற்பார்வை செய்கின்ற சூப்பர்வைஸர் என்று ஒருவர் உண்டே! அவர் எங்கே? சென்றார் இத்தனை நாட்களாக?
சகோதரர் விளக்கு எஸ்.எம்.ஏ. அவர்கள் குறிப்பிட்டிருக்கும் கருத்து மிகவும் வரவேற்கத்தக்கது.
கல்யாணம் மற்றும் விசேஷங்களில் தடபுடலாக விருந்து வைப்பவர்கள் எதுவும் கெளரவக் குறைவு வந்துவிடக்கூடாது – அதிகமாகவே ஆக்குங்கள் (சமையுங்கள்) என்று ஆக்கி சட்டிக் கணக்கில் மிஞ்சிப்போகும் - அதை அங்கே கொடு, இங்கே கொடு என்று கொடுத்துவிடுவார்கள் – அதுவும் இரவில் மிஞ்சிப்போனால் பெரும்பாலும் மண்ணில் புதைக்கப்படுகிற காட்சிகளை காணலாம்.
இப்படி கெளரவம் பார்த்து பல ஆயிரக்கணக்கில் வீணாக கொட்ட மனம் வரும் – அதே நேரத்தில் சுத்தம், சுகாதாரம் பேணுவதற்காக சில நூறு ரூபாய்களை செலவு செய்து அந்த இடத்தை சுத்தம் செய்ய மனம் இருக்காது.
இதற்கெல்லாம் காரணம் மார்க்கப்பற்று குறைவதும் – ஹராமான பணம் புழங்குவதும்தான்.
------------------------------------------------
தெருக்களில் கல்யாணப்பந்தல் போட்டால் நகராட்சியிலிருந்து உடனே வந்து, வரி வசூல் செய்வார்கள் – அது என்ன கணக்கு , எவ்வளவு பணம் – ஒரே பந்தலுக்கு ஒரு முறை வசூலா? இல்லை பல முறை வசூலா?. அது யாருக்கும் தெரியாது! என்னைப்போல் அனுபவப்பட்டவர்களுக்கே தெரியும் - அதற்கு வக்காலத்து வாங்க இன்னால்/முன்னால் கவுன்ஸிலர் வேறு வருவார் – அதிலெல்லாம் எல்லோரும் ஒற்றுமையாக இருப்பார்கள். மக்களுக்கு சேவை செய்வதில்தான் எதிரும் புதிருமாவார்கள்.
நகராட்சியில் நல்ல நிர்வாகம் நடந்தால் எவ்வளவோ செய்யலாம்
பந்தல் வரி வசூல் செய்யும்போதே! துப்பரவு பணிக்கும் சேர்த்து அட்வான்ஸாக வசூல் செய்து கொள்ளலாம்.
வீட்டுக்காரர்கள் அந்த இடத்தை சுத்தம் செய்திருந்தால் பணம் திரும்பக் கொடுத்துவிடலாம் – சுத்தம் செய்யாதிருந்தால் நகராட்சியே அந்த இடத்தை சுத்தம் செய்து விட்டு அந்த பணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று திட்டம் தீட்டி முறையாக ரஷீது கொடுத்து சேவையாற்றலாம். இதை நமது நகராட்சி செய்யுமா?.
5. Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (RIYADH)[21 May 2015] IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40677
அஸ்ஸலாமு அலைக்கும்
என்னப்பா இது .....இந்த தொகுதி உறுப்பினர்கள் என்னதான் செய்து கொண்டு இருக்கிறார்கள் ....ஓன்று மட்டும் நமக்கு தெளிவாக தெரிகிறது....உறுப்பினர் அவரின் தொகுதியை சரிவர கவனிக்க வில்லை ....என்பது மட்டும் விளங்குகிறது ....
நமது '' இணைய தளம் '' குறிப்பிட்டது போன்று நமது ஊரின் மற்ற பகுதிகளிலும் இந்த அவல நிலை இருப்பது உண்மையே ......மற்ற பகுதிகளுக்கும் சேர்த்து நல்லதோர் முடிவு வந்தால் நல்லதே .......இப்படியே போனால் நம் ஊரின் நிலை தான் என்ன ??
நமது நகராச்சி இவ்வளவு மெத்தனம் ?? நாம் யாரை தான் குறை சொல்லுவது ?? அவர்களாக பார்த்து திருந்தினால் தான் உண்டு .....
நல்லதோர் நிர்வாக திறமை உள்ள நகர் மன்ற தலைவி அவர்கள் இருந்தும் நமது ஊரின் முன்னேற்றத்துக்கு ஒரு வழியும் இல்லாமல் இருப்பது நமது '' துரதிஸ்டமே ''
நாம் பொருத்து விட்டோம் .....இன்னும் கொஞ்ச காலம் தானே பொறுப்போம் ..... அல்லாஹ் நல்லதையே நாடுவான் .....
6. Re:... posted bykamalmusthafa (abha.ksa)[21 May 2015] IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40680
நம்ம ஓட்டு போட்டு M .L .A .வாகவும் மந்திரியாக வும் ஆக்குறோம் அவர்களே தொகுதியை சரியாய் கவனிப்பது கிடையாது. பாவம் இவர் சாதாரனவார்டு மெம்பர்தானே.பரிமார் தெரு தானே யாரும் கேக்க மாட்டார்கள் என்று நினைத்து விட்டார் போல் தெரிகிறது.
அவர்களும் மனிதர்கள் தானே என்பதை மறந்தது விட்டார் பாவம் பரிமார் தெரு மக்கள் நகராச்சி கூட இதை கண்டு கொள்வது இல்லை என்பதை நினைத்தால் மிகவும் வருந்த தக்க விஷயம்.
நம் பாரத பிரதமர் மோடி அவர்கள் தூய்மை இந்தியாஎன்ற திட்டத்தை கொண்டு வந்து கொஞ்ச நாள் அவரும் நாட்டில் உள்ள குப்பை கலை அகற்றி கொண்டு இருந்தார். இதை பார்த்து நம்ம ஊர் நகராச்சி தலைவியும் நம் ஊர் கடல் கரையில் குப்பைகளை அகற்றுவது மாதிரி நம் ஊர் இலையதளத்தில் பார்த்தேன். இப்போதுதான் புரிகிறது எல்லாம் விளம்பரத்துக்கு தான் என்று இனியாவது உண்மையான முறையில் நகரை சுத்தமாக வைக்க முன்வர வேண்டும்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross