தாய்லாந்து காயல் நல மன்றம் - தக்வா அமைப்பின் ஒருங்கிணைப்பில், காயல்பட்டினம் நகர பள்ளிகளின் இமாம் - முஅத்தின்களுக்கான பெருநாள் ஊக்கத்தொகை வழமை போல நடப்பாண்டும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் பங்களிப்புச் செய்ய அனைவரையும் கோரி அம்மன்றத்தின் செயலாளர் எம்.எஸ்.செய்யித் முஹம்மத் வெளியிட்டுள்ள அறிக்கை:-
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
அன்பின் அனைத்துலக காயல் நல மன்ற தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் காயல் நகரைச் சார்ந்த அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
வல்ல அல்லாஹ்வின் பெருங்கிருபையால், அனைத்துலக காயல் நல மன்றங்களின் மகத்தான ஒத்துழைப்புடன் எமது தாய்லாந்து காயல் நல மன்றத்தின் (தக்வா) முனைப்பில், காயல்பட்டினத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளின் இமாம் - முஅத்தின் களுக்கு நோன்புப் பெருநாள் ஊக்கத் தொகை வழங்க தீர்மானிக்கப்பட்டு, கடந்த 3 ஆண்டுகள் அது செயல் வடிவமும் பெற்றுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.
நாம் அவர்களுக்கு வழங்கும் தொகை சில ஆயிரங்கள்தான் என்றாலும், அதிக செலவைச் சந்திக்கும் பெருநாள் நேரத்தில் நாம் அளிக்கும் இந்த ஊக்கத்தொகை அவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
இவ்வாண்டு முதல் இன்ஷா அல்லாஹ் ஹஜ்ஜுப் பெருநாளைக்கும் இதைப் போன்று ஊக்கத் தொகை கொடுக்க நாடியுள்ளோம். சென்ற ஆண்டுகளில் நோன்பில் ரூ .4500 வழங்கினோம். இவ்வாண்டு ரூ. 5000 நோன்பிலும், மேலதிக வசூலைப் பொறுத்து ரூ.2000 க்கு குறைவில்லாமல் ஹஜ்ஜுப் பெருநாளுக்கும் கொடுக்க நாடியுள்ளோம். நகரில் உள்ள 36 பள்ளிகளின் மொத்த இமாம், முஅத்தின்களின் எண்ணிக்கை 66.
இவர்களுக்கு தலா ரூபாய் 5 ஆயிரம் நோன்பிற்கான ஊக்கத் தொகையாக அளிக்க, தேவையான தொகை ரூ. 3,30,000. ஹஜ்ஜுப் பெருநாளைக்கு குறைந்தது ரூ. 2000 ஆவது கொடுத்தால்தான் ஒரு கண்ணியமாக இருக்கும்.
நலிவுற்றுள்ள இமாம் - முஅத்தின்கள் பெருநாட்களை மகிழ்வோடு கொண்டாட வேண்டுமென்ற எண்ணத்தில் இதுபோன்ற உதவிகள் அவசியமாகின்றன என்பதைக் கருத்திற்கொண்டு, இம்முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.
இதுவரையில் கீழ்க்கண்ட மன்றங்கள் மற்றும் தனி நபர்கள் தங்களின் தொகையினை அறிவித்துள்ளனர்.
மற்ற மன்றங்களும் தனி நபர்களும் இன்ஷாஅல்லாஹ், விரைவில் தங்களின் ஜகாத் அல்லது நன்கொடையை இமாம் முஅத்தின் வாட்ஸ்அப் குழுவிலோ அல்லது எங்களுடன் மின்னஞ்சல் thakwabkk@gmail.com மூலமாகவோ அல்லது என்னுடைய கைபேசி எண்: +66 867 577 296 மூலமாகவோ தெரிவிக்க வேண்டியது.
எல்லாம் வல்ல அல்லாஹ் நமதூர் நலனுக்காக நாம் செய்யும் இந்த தன்னலமற்ற நற்காரியங்களைக் கபூல் செய்து, அவற்றுக்கான பலனை இம்மை மறுமையில் நமக்கு நிறைவாகத் தந்தருள்வானாக, ஆமீன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்து காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |