காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கத்தின் சார்பில், மவ்லானா அபுல்கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான - அகில இந்திய அளவிலான கால்பந்து சுற்றுப்போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
50ஆம் ஆண்டு பொன்விழா சுற்றுப்போட்டிகள் இம்மாதம் 06ஆம் நாள் புதன்கிழமை 16.50 மணியளவில், ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் துவங்கியது.
மே 20 புதன் கிழமை மாலையில் நடைபெற்ற போட்டியில், ASC பெங்களூரு அணியும், SDS சென்னை அணியும் மோதின.
ஆட்டத்தின் முதற்பாதி ‘சவ்வு மிட்டாய்” போல மிகவும் மந்தமாக இழுத்துக்கொண்டிருந்தது. மறுபாதியில் வெற்றிபெறும் முனைப்புடன் ஈரணிகளும் விளையாடின. 52 மற்றும் 67ஆவது நிமிடங்களில், பெங்களூரு அணியின் டி.டீ.பூட்டியா என்ற வீரர் இரண்டு கோல்களை அடித்தார். மறுமுனையில் சென்னை அணி கோல் எதுவும் அடிக்காததால், 2-0 என்ற கோல் கணக்கில் பெங்களூரு அணி வெற்றிபெற்று, காலிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது.
இப்போட்டியை, நகரின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் கால்பந்து ரசிகர்கள் திரளாக வந்து பார்த்து ரசித்தனர்.
இப்போட்டியில், காயல்பட்டினம் நகரப் பிரமுகர் லேண்ட்மார்க் ராவன்னா அபுல்ஹஸன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். இடைவேளையின்போது அவருக்கு ஈரணி வீரர்களும் அறிமுகம் செய்துவைக்கப்பட்டனர்.
மே 21 வியாழக்கிழமை மாலை நடைபெறும் - இச்சுற்றுப் போட்டியின் கடைசி காலிறுதிப் போட்டியில், பெங்களூரு ASC அணியும், மாநகர காவல் (சிட்டி பொலிஸ்) சென்னை அணியும் மோதவுள்ளன.
அன்றாடம் நடைபெறும் போட்டிகள் அனைத்தும், www.azadtrophy.com என்ற இணையதளத்தில் நேரலை செய்யப்பட்டு வருகிறது.
தகவல் உதவி:
‘ஆசிரியர்’ கலீஃபா ஸதக்கத்துல்லாஹ்
Twitter update:
ஹாரூன் மீரான்
நடப்பாண்டு கால்பந்துப் போட்டி குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
கடந்தாண்டு நடைபெற்ற பதினான்காம் நாள் போட்டி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |