நடைபெற்று முடிந்துள்ள ப்ளஸ் 2 அரசுப் பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண்களைப் பெற்ற மாணவியருக்கு, வாவு வஜீனா வனிதையர் கல்லூரி பின்வருமாறு கல்விக் கட்டண சலுகைகளை அறிவித்துள்ளது:-
கல்லூரி கல்விக்கு கனிவான அழைப்பு
2014-15 ஆம் கல்வி ஆண்டில் மேல்நிலை பள்ளித் தேர்வில் வெற்றி பெற்ற மாணவியருக்கு வாவு வஜீஹா வனிதையர் கல்லூரி சார்பாக கல்லூரி நிறுவனத் தலைவர் அல்ஹாஜ் வாவு S. செய்யது அப்துர் ரஹ்மான், தனது வாழ்த்துக்களைத் தெரிவித்து கொள்கிறார்.
வாவு எஸ்.ஏ.ஆர். அறக்கட்டளையின் கீழ் செயல்பட்டு வரும் வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் அறிவியல் பட்டப்படிப்பு (பி.எஸ்ஸி.) பயில்வதற்கு கணிதவியல் (Mathematics), கணினி அறிவியல் (Computer Science), தகவல் தொழில் நுட்பவியல் (Information Technology) என மூன்று பிரிவுகள் உள்ளன. கலைப்பாடப்பிரிவில் (B.A.) ஆங்கில இலக்கியம் (Eng. Literature), பொருளியல் (Economics), தமிழ் இலக்கியத்துடன் கணினி பயன்பாடு (B.A. Tamil Lit. with Computer Application), வணிக நிர்வாகவியல் (Business Administration) ஆகிய பிரிவுகளும் வணிகவியல் (B.Com.) பிரிவும் உள்ளன. இக்கல்லூரியில் கல்வி பயிலும் மாணவியருக்கு மதிப்பெண் அடிப்படையில் கல்வி கட்டணச் சலுகை வழங்கப்பட்டு வருகிறது.
மேல்நிலை பள்ளித் தேர்வில் 1074 மதிப்பெண் பெற்ற மாணவியர் கல்விக் கட்டணம் மற்றும் சிறப்புக் கட்டணம் முதல் பருவத்திற்கு மட்டும் கட்டத் தேவையில்லை. பல்கலைகழக முதல் பருவத்தேர்வில் கலைப்பிரிவில் 80%, அறிவியல் பிரிவில் 84%, மதிப்பெண் பெறும் அனைத்து மாணவியருக்கு, தொடரும் பருவத்தில் கட்டணச் சலுகை வழங்கப்படும். மதிப்பெண் அடிப்படையில் இச்சலுகை பருவம்தோறும் தொடரும்.
75% மதிப்பெண் பெற்று பட்டப்படிப்பை முடித்து பட்டமேற்படிப்பிற்கு (PG) வரும் மாணவியருக்கும் இச்சலுகை வழங்கப்படும்.
தகுதி வாய்ந்த பேராசிரியர்கள், அயராது உழைக்கும் பணியாளர்கள், காற்றோட்டமான முறையில் அமைந்துள்ள வகுப்பறைகள், கல்வி பயிலுவதற்கான சூழலை உருவாக்கித்தரும் நூலகம் என பல்வேறு சிறப்பு அம்சங்கள் நிறைந்த, வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் 2015-16 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவியர் சேர்க்கை தற்பொழுது நடைபெற்று வருகின்றது.
கல்லூரி அலுவலகத்தில் விண்ணப்பத்தினைப் பெற்று, பள்ளி மதிப்பெண் பட்டியல் நகல், மாற்றுச் சான்றிதழ் நகல், சாதிச் சான்றிதழ் நகல் இவற்றுடன் விண்ணப்பத்தினை நிரப்பிக் கொடுத்து, தங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் தொடர்புக்கு 04639-280900, 281500 எண்களை அழைக்கவும்.
வாவு வஜீஹா வனிதையர் கல்லூரி தொடர்பான முந்தைய செய்தியைக் காண ; இங்கே சொடுக்குக! |