சென்னையில் உள்ள ராதாகிருஷ்ணன் நகர் (ஆர்.கே. நகர்) சட்டப் பேரவை தொகுதி உறுப்பினர் பி.வெற்றிவேல், தனது பதவியை ஞாயிற்றுக்கிழமை ராஜிநாமா செய்தார்.
இதையடுத்து, அந்தத் தொகுதி காலியானதாக பேரவைத் தலைவர் பி.தனபால் அறிவித்தார்.
அதுகுறித்த அறிவிப்பு தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமையில் (மே 17) இருந்தே ஆர்.கே.நகர் தொகுதி காலியானது. இந்தத் தொகுதிக்கு நடத்தப்படும் இடைத் தேர்தலில், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா போட்டியிட வாய்ப்புள்ளதாக அந்தக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
3. Re:...அரசியல் சாணக்கியம் posted bymackie noohuthambi (kayalpatnam)[18 May 2015] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 40629
திமுக பாமக தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்கள் நான் நீ என்று அம்மாவுக்கு ஐஸ் வைக்க புறப்பட்டார்கள். அவருக்கு தெரியும் சூடு கண்ட பூனை. அவர்கள் தயவில் ஜெயித்தால் நாளை ஒருநாள் நாங்கள் அம்மாவுக்கு ஆதரவு கொடுத்ததால்தான் அம்மா ஜெய்ச்சார்கள் என்று சொல்வார்கள். இந்த வம்பு எதற்கு. தடைகளை தாண்டி வெற்றி நடைபோடும் போது இந்த வேலை நமக்கு எதற்கு என்று அம்மா வியூகம் வகுத்து உடனடியாக களம் இறங்கி இருப்பதை பாராட்டாமல் இருக்க முடியாது.
அரசியல் சாணக்கியத்தில் வெற்றிக் கொடி நாட்டிய கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு ஒரு சவால். வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்று அம்மாவும் சரி கலைஞரும் சரி அதை நம்பவேண்டும். வெறுமனே ''நான் என்று சொல்வதை நாம் என்று சொல்வதால் நாடெல்லாம்
வாழும்'' என்றோ ''நாம் என்றால் உதடுகள் ஓட்டும் நான் என்றால் உதடுகள் ஒட்டாது'' என்று வார்த்தை ஜாலங்கள் பேசிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. நிதர்சன உண்மைகளை ஏற்றுக் கொள்ளும் மனோ பக்குவம் எல்லோருக்கும் வேண்டும். அடித்தால் லாபமா அடிபட்டால் லாபமா என்று கணக்கு பார்த்து காய் நகர்த்தினால் வெற்றி நிச்சயம். வைகோ அவர்களும் ஸ்டாலினும் சந்தித்து பேசி இருப்பதும் இந்த அரசியல் சானக்கியத்தின் மற்றொரு கோணம்.
புது புது அர்த்தங்கள் புதிய பார்வைகள்...2016 பல புதிய திருப்பங்களை சந்திக்க இருக்கிறது பொறுத்திருந்து பார்ப்போம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross