காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃபின் 88ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள், 19.04.2015 ஞாயிற்றுக்கிழமை 19.00 மணிக்கு திக்ர் மஜ்லிஸுடன் துவங்கியது.
ரஜப் மாதம் முழுவதும் ஒவ்வொரு நாளும் அதிகாலையில் ஸஹீஹுல் புகாரீ கிரந்தத்திலிருந்து நபிமொழிகள் ஓதப்பட்டு, காலை 09.15 மணியளவில் அன்றைய நாளில் ஓதப்பட்ட நபிமொழிகளுக்கு மார்க்க அறிஞர்களால் விளக்கவுரை வழங்கப்படுவது வழமை.
ரஜப் 26 அன்று (மே 16ஆம் நாள்) அன்று ஓதப்பட்ட நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, ‘அல்அஸ்ரார்’ மாத இதழின் ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் டீ.எஸ்.ஏ.செய்யித் அபூதாஹிர் மஹ்ழரீ ஃபாழில் ஜமாலீ வழங்கினார்.
இறைத்தூதர்கள், இறைநேசர்கள் மீது ஒருவர் கொள்ளும் நேசம், இந்நேசத்திற்கும் - வணக்க வழிபாடுகளுக்கும் இடையே உள்ள தர வேறுபாடுகள் குறித்த தகவல்கள் அவரது உரையில் இடம்பெற்றிருந்தன.
ரஜப் 27ஆம் நாள் (மே 17) அன்று நபிகளார் மிஃராஜ் - விண்ணுலகப் பயணம் சென்ற விசேஷ நாளாகும். மிஃராஜ் சரித்திர விளக்கத்தையும், அன்று ஓதப்படும் நபிமொழிகளுக்கான விளக்கவுரையையும், இலங்கை கொழும்பு சம்மாங்கோட் பள்ளியின் இமாமும், காயல்பட்டினம் ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் கவுரவ ஆசிரியருமான மவ்லவீ நஹ்வீ ஐ.எல்.செய்யித் அஹ்மத் முத்துவாப்பா ஃபாஸீ வழங்குகிறார்.
ஒவ்வொரு நாளும் நடைபெறும் சொற்பொழிவு நிகழ்ச்சிகள், http://www.bukhari-shareef.com/eng/live/ என்ற வலைதள பக்கத்தில் ஒலி நேரலை செய்யப்படுகிறது.
மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் 1436ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் 1435ஆம் ஆண்டு (கடந்தாண்டு) 26ஆம் நாள் நிகழ்ச்சிகள் தொடர்பான செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |