செய்தி எண் (ID #) 15930 | | |
வியாழன், மே 14, 2015 |
அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக்கல்லூரியின் முதல் கண்காணிப்பாளர் (அதன் நிறுவனரின் மனைவி) புனித மக்காவில் காலமானார்! |
செய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்) இந்த பக்கம் 4481 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (35) <> கருத்து பதிவு செய்ய |
|
காயல்பட்டினம் அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக் கல்லூரியின் முதல் கண்காணிப்பாளரும் (ரகீபா), அதன் நிறுவனர் - தீவுத்தெருவைச் சேர்ந்த ஹாஜி டீ.எம்.ரஹ்மத்துல்லாஹ்வின் மனைவியுமான ஹாஜ்ஜா ஆமினா ரமீலா, சஊதி அரபிய்யா புனித மக்கா நகரில் உம்றா கிரியைகளை நிறைவேற்றிவிட்டு, மதீனாவிற்கும் சென்று மீண்டும் மக்கா திரும்பிய நிலையில், இன்று அதிகாலை 06.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 72. அன்னார்,
காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியின் முன்னாள் தாளாளர் மர்ஹூம் ஹாஜி பி.மஹ்மூத் அவர்களின் மகளும்,
மர்ஹூம் தைக்கா முத்துவாப்பா ஆலிம் அவர்களின் மருமகளாரும்,
காயல்பட்டினம் அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக் கல்லூரியின் நிறுவனர் ஹாஜி டீ.எம்.ரஹ்மத்துல்லாஹ்வின் மனைவியும்,
ஹாஜி பி.புகாரீ, மர்ஹூம் ஹாஜி பி.ஜாவித் முஹ்ஸின், மர்ஹூம் ஹாஜி பி.ஆரிஃப் ஆகியோரின் சகோதரியும்,
காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் நிர்வாகக் குழு முன்னாள் உறுப்பினரும், ஹாங்காங் நாட்டில் தமிழ் வகுப்புகளை நடத்தி வரும் இளம் இந்திய நண்பர்கள் குழுவின் நிறுவனர்களுள் ஒருவருமான தைக்கா உபைதுல்லாஹ், ஹாஃபிழ் மஹ்மூத் ஆகியோரின் தாயாரும்,
ஹாஜி பி.ரிஃபாய் என்பவரின் மாமியாரும்,
தல்ஹா ரஹ்மத்துல்லாஹ், ஸஹ்ல் ஆகியோரின் தந்தையின் தாயாரும்,
ஆதிப் மஃபாஸ் என்வரின் தாயாரின் தாயாருமாவார்.
அன்னாரின் ஜனாஸா, புனித மக்காவில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
தகவல்:
மன்னர் பாதுல் அஸ்ஹப் மூலமாக
‘சட்னி’ காழி அலாவுத்தீன்
[கூடுதல் தகவல்கள் இணைக்கப்பட்டன @ 12:37 / 14.05.2015]
[கூடுதல் தகவல்கள் இணைக்கப்பட்டன @ 15:24 / 14.05.2015] |