வரும் ரமழான் மாதத்தில், இமாம் / முஅத்தின்களுக்கு நோன்புப் பெருநாள் ஊக்கத்தொகை வழங்கல், ஏழைகளுக்கு உணவுப் பொருட்கள் வினியோகம், இக்ராஃ கல்விச் சங்கத்தின் கல்விப் பணிகள் ஆகியவற்றுக்கு அபூதபீ காயல் நல மன்ற செயற்குழுக் கூட்டத்தில் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-
அபூதபீ காயல் நல மன்றத்தின் 31ஆவது செயற்குழுக் கூட்டம், இம்மாதம் 08-05-2015 வெள்ளிக்கிழமை மாலை மன்றத்தின் கவுரவத் தலைவர் அல்ஹாஜ் I. இம்தியாஸ் அகமது அவர்களின் தலைமையில் செயற்குழு உறுப்பினர் மக்பூல் அஹ்மத் மற்றும் பொருளாளர் பீ.எம்.ஹுஸைன் நூருத்தீன் ஆகியோரது இல்லத்தில் வைத்து கூடியது. பீ.எம். ஹுஸைன் நூருத்தீன் கிராஅத் ஓதி கூட்ட நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார்.
இமாம் மற்றும் முஅத்தின் நிதி உதவி!
இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் புனித ரமழான் மாதத்தில் இமாம் மற்றும் முஅத்தின் நிதி உதவிக்காக ருபாய் 25,000 மன்றத்தின் சார்பாகவும் மற்றும் உறுப்பினர்களின் தனி அனுசரணையோடு ருபாய் 15,000 ஜகாத் நிதியின் மூலம் அளிக்க உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்தனர். இத்திட்ட நிதியை வழங்குவதற்கு எம்.ஓ.அன்ஸாரீ [055 910 09 09], டாக்டர் எச்.எம்.ஹமீத் யாஸிர் [055 292 9702], இஸ்மாயில் [050 293 3778] ஆகியோர்களை மன்ற உறுப்பினர்கள் தொடர்புகொண்டு தத்தம் நிதியை ஜகாத் மற்றும் ஸதக்கா வகையில் செலுத்த வேண்டுமாய் கேட்டுக்கொள்ளப்பட்டது.
மன்றத்திற்காக ஜகாத் நிதி பெறுதல்!
மன்றத்தின் வளர்ச்சிக்காக மன்ற உறுப்பினர்கள் மாதம் தோறும் தரும் சந்தா தொகையோடு தங்களால் இயன்ற ஜகாத் நிதியை அதிகம் தந்து மன்ற கருவூலத்தை அதிகமாக்க வேண்டுகோள் விடுத்து இவ்வகை நிதியை பெற்றுத்தர செயற்குழு உறுபினர்கள் இப்ராகிம் இர்ஷாத் [050 292 0952], M.I.R.ஷாஹுல் ஹமீத் [055 941 56 76] மற்றும் மக்பூல் அஹ்மத் [050 690 46 00] ஆகியோர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே மன்ற உறுப்பினர்கள் இவர்களிடம் தங்களால் இயன்ற ஜகாத் நிதியை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
ரமழான் மாத உணவுப்பொருள் வழங்கும் திட்ட உதவி!
கடந்த ஆண்டைப் போன்று சிறப்புற செயல்படுத்தி வரும் ரமழான் மாத உணவுப்பொருள் வழங்கும் திட்டத்தை இவ்வருடமும் இன்ஷா அல்லாஹ் மன்றத்தின் சார்பாக 15 நபர்களுக்கும், தனித்தனி அனுசரணை மூலம் இதுவரை 21 நபர்களுக்கும் மொத்தம் 36 நபர்களுக்கு இவ்வருடமும் இன்ஷா அல்லஹ் வழங்குவதென்று முடிவு செய்யப்பட்டு, மேலும் இதற்காக உணவுப்பொருள் வழங்க நாடுவோர் உடனடியாக இணைப் பொருளாளர் நோனா அபூஹுரைரா [ 056 109 27 66 ] மற்றும் மக்பூல் அஹ்மத் ஆகியோர்களை தொடர்புகொண்டு ரமழான் நெருங்கிவிட்டதை கருத்தில்கொண்டு பயனீட்டாளர்களின் முகவரியும், தொகையும் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
இக்ரா கல்வி நிதி மற்றும் அலுவலக நிதி உதவி!
இக்ரா கல்வி நிதி மற்றும் அலுவலக நிதி உதவிகளுக்காக சில உறுப்பினர்களின் தொகைகள் மன்ற கருவூலத்தில் இக்ரா பணிகளுக்காக சேர்த்துக்கொள்ளப்பட்டது. இதுவரை இவ்வருட [2015 - 16] கல்விநிதி உதவிக்கான தொகை ருபாய் 30,000 மற்றும் இக்ராவின் அலுவலக நிதிக்கான ருபாய் 12,000 மும் நமது மன்றத்தின் ஒரு சில உறுப்பினர்களின் அனுசரனையில் மன்றம் நிதி ஒதுக்கியது. மேலும் இக்ரா கல்விநிதிக்காக தாராளமாய் உதவி செய்யுமாறு கலந்துகொண்ட உறுப்பினர்களிடம் கேட்டுக்கொண்டார்.
மன்றத்தின் 6ஆவது பொதுக்குழுக் கூட்டம்!
மன்றத்தின் அடுத்த (6ஆவது) பொதுக்குழுக் கூட்டத்தை, இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் புனித ரமழான் மாத முதல் வாரத்தில் - அதாவது, ஜூன் மாதம் 25ஆம் நாளன்று இப்தாருடன் வெகு சிறப்பாகக் கூட்ட இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு நிகழ்விடம், மற்றும் பொதுக்குழு இதர காரியங்களை சிறப்பாக்கி தர ஹாஜி ஐ.இம்தியாஸ் அஹ்மத், மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.ஹபீபுர்ரஹ்மான் மஹ்ழரீ, எஸ்.ஏ.சி.ஹமீத், V.S.T.ஷேக்னா லெப்பை ஆகியோர்கள் மற்றும், சந்தா தொகை வசூலிக்க இணைப் பொருளாளர்கள்: நோனா அபூஹுரைரா,எம்.ஓ.அன்ஸாரீ, மக்கள் தொடர்பு செயலர்: ஏ.ஆர்.ரிஃபாய் [ 055 420 30 56 ] மற்றும் இஸ்மாயில் [ 050 293 37 78 ] ஆகியோர்கள் செயல்படுவார்கள். பொதுகுழு நிகழ்வுகளில் கலந்து கொள்ள அணைத்து உறுபினர்களுக்கும் மின்னஞ்சல்/குறுஞ்செய்தி (Email/SMS) வாட்சப் (WhatsApp), இனைய தளங்களில் மூலம் தகவல் தெரிவித்து உறுப்பினர்களை ஒன்றிணைக்க இணைச் செயலாளர் கே.ஹுபைப் [050 849 0978 ], டாக்டர் விளக்கு எஸ்.செய்யித் அஹ்மத் [ 050 945 04 04 ] ஆகியோர்கள் நியமிக்கப்பட்டனர்.
புதிய உறுப்பினர் சேர்க்கை!
புதிய உறுப்பினராக ரியாத்தில் இருந்து வருகைதந்துள்ள சகோதரர் K.M.N அபூபக்கர் சம்சுதீன் தம்மை அறியமுகப்படுத்தியபின் அவரை மன்ற செயற்குழு உறுபினராக செயலாற்ற மன்றம் பணித்ததை அன்போடு ஏற்றுக்கொண்டு பணியாற்ற உறுதி செய்துகொண்டார்.
சிறப்பு அழைப்பாளர்!
இக்கூட்டத்தில், சிங்கபூர் காயல் நல மன்ற செயலாளர் மக்தூம் முஹம்மது சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு ரமழான் மாத உணவுப்பொருள் வழங்கும் திட்ட உதவி, ஷிபா மற்றும் இக்ராஃ பற்றிய சில தகவல்களை உறுப்பினர்களோடு பகிர்ந்து கொண்டார்.
ஷிபாக்கான மன்ற ஒருங்கிணைப்பாளர் டாக்டர் எஸ்.செய்யித் அஹ்மத் அவர்கள் மூலம் ஷிபாவின் பணிகள் சிறக்க மன்றம் அணைத்து முயற்சிகளும் சிங்கபூர் நல மன்றத்தின் ஷிபாவின் செயல்பாடுகளில் துணை நிற்கும் என உறுப்பினர்கள் உறுதி அளித்தனர்
இரங்கல் தீர்மானம்!
அண்மையில் காலமான - மன்ற பொருளாளர் பீ.எம்.ஹுஸைன் நூருத்தீன் அவர்களின் தந்தையார் மர்ஹூம் அல்ஹாஜ் எஸ்.ஏ.பீர் முஹம்மத் அவர்கள், அல்அய்ன் செற்குழு உறுப்பினர் ரயீஸ் அவர்களின் தந்தையார் மர்ஹூம் ஹாஜி T.S.M. பாக்கவி அஹமது பஷீர் அவர்கள் மற்றும் மன்ற மருத்துவ குழு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் எச்.எம்.ஹமீத் யாஸிர் அவர்களின் தாயார் மர்ஹூமா ஷக்கினா உம்மாள் ஆகியோர்களின் மறைவுக்கு இக்கூட்டத்தில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதோடு, அன்னவர்களின் மஃக்ஃபிரத்திற்காக (பாவப் பிழை பொறுப்பிற்காக) துஆ பிரார்த்தனை செய்யப்பட்டது.
இறுதியாக ஹாஃபிழ் நஹ்வி. S.A. இஸ்ஹாக் லெப்பை ஆலிம் மஹ்ழரி அவர்களின் துஆ மற்றும் கப்பாராவுடன் கூட்டம் இனிதே நிறைவுபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபூதபீ கா.ந.மன்றம் சார்பாக...
தகவல்:
M.E. முகியதீன் அப்துல் காதர்
(செய்தி மற்றும் ஊடகத்துறை பொறுப்பாளர்)
செய்தியாக்கம்:
A.R.ரிஃபாய்
(மக்கள் தொடர்பு செயலர்)
படங்கள்:
சுப்ஹான் N.M.பீர் முஹம்மத்
அபூதபீ காயல் நல மன்றத்தின் முந்தைய (30ஆவது) செயற்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |