பள்ளிக்கூடம் செல்லும் மாணவர்களுக்கு - அவர்களது வாராந்திர விடுமுறை நாளில் இஸ்லாமிய மார்க்க ஒழுக்கக் கல்வியைப் பயிற்றுவிப்பதற்காக, காயல்பட்டினத்தில் தீனிய்யாத் மத்ரஸாக்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வரிசையில், காயல்பட்டினம் புதுப்பள்ளி வளாகத்தில், மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்க சபை (MARO) எனும் பெயரில் பல்லாண்டு காலமாக தீனிய்யாத் மத்ரஸா நடைபெற்று வருகிறது.
இந்த மத்ரஸாவின் மீலாத் விழா, ஆண்டு விழா உள்ளிட்ட முப்பெரும் விழாக்கள், மத்ரஸா மாணவர்களின் கண்கவர் அணிவகுப்பு நிகழ்ச்சிகள், பல்சுவை சன்மார்க்கப் போட்டிகளுடன் கடந்த ஏப்ரல் மாதம் 24, 25 நாட்களில் நடைபெற்று முடிந்துள்ளன. இதுகுறித்து, வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-
மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்க ஸபையின் முப்பெரும் விழா ஹிஜ்ரி 1436 ரஜப் பிறை 04, 05 (2015 ஏப்ரல் 24,25) வெள்ளி, சனி ஆகிய தினங்களில் ஸதக்கத்துல்லாஹ் அப்பா திடலில் சிறப்பாக நடைபெற்றது.
முதல் நாள் 24-04-2015 வெள்ளிக்கிழமை
காலை நிகழ்ச்சிகள்
காலையில் இடம் பெற்ற 'பூமான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களின் புகழ்பாடும் புனித புர்தா மஜ்லிஸ்' நிகழ்ச்சிக்கு அல்ஹாஜ் P.M.L. முஹம்மது சுலைமான அவர்கள் தலைமையேற்று சிறப்பித்தார்கள். அதனைத் தொடர்ந்து பாத்திஹா துஆவுடன் அமைதிக்கு வழிகாட்டும் அனைவரையும் ஒருங்கிணைக்கும் ஆன்மீகப் பேரணி துவங்கியது.
இப்பேரணியை மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்க ஸபையின் தலைவர் ஜனாப் P.M.A. முஹ்யித்தீன் அப்துல் காதர் அவர்கள் துவக்கி வைத்தார்கள். அதன் பின்னர் மாணவர்களுக்கான சன்மார்க்க போட்டிகள் (அல்ஹதீத், அல்-அஸ்மாவுல் ஹுஸ்னா,இஸ்லாமிய பாடல், பாங்கு, கிராஅத், பேச்சுப் போட்டி) அல்ஹாஜ் A.A. சம்சுத்தீன் லெப்பை அவர்கள் முன்னிலையில் இடம்பெற்றன.
மாலை நிகழ்ச்சிகள்
மாலை நிகழ்ச்சிகளின் துவக்கமாக மாணவர்களின் அணிவகுப்பு & உடற்பயிற்சி நிகழ்ச்சி இடம் பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்க ஸபையின் முதல்வர் மௌலானா மௌலவி A.H.M.A. மிஸ்கீன் ஸாஹிபு ஆலிம் ஃபாஸி அவர்கள் தலைமை ஏற்று சிறப்பித்தார்கள். L.K.மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜனாப். M.A.F. செய்யது அகமது M.Sc.,M.Ed., M.Phil., அவர்கள் முன்னிலை வகித்தார்கள். மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்க ஸபையின் இணை செயலாளர் ஜனாப் K.V.S.A. ஹபீபு முஹம்மது B.Sc.,அவர்கள் வரவேற்புரையாற்றினார்கள்.
அதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி 'மறை போற்றும் மாணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்' என்ற தலைப்பில் நடைபெற்றது.
இரவு நடைபெற்ற தஃப்ஸ் நிகழ்ச்சிக்கு புதுப்பள்ளியின் தலைவர் அல்ஹாஜ். S.M.. உஜைர் அவர்கள் தலைமை ஏற்று சிறப்பித்தார்கள். அதனைத் தொடர்ந்து மத்ரஸா மாணவர்கள் மற்றும் மத்ரஸாவின் பெண்கள் பிரிவான மஜ்லிசுன் நிஸ்வான் மாணவிகள் வழங்கிய இன்சுவை மார்க்க நிகழ்ச்சிகள் இடம் பெற்றது.
அதனைத் தொடர்ந்து திருவிதாங்கோடு ஜாமிவுல் அன்வர் அரபிக்கல்லூரியின் பேராசிரியர் மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ் M. நிஜாமுத்தீன் அஹ்ஸனி அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.
இரண்டாம் நாள் 25-04-2015 சனிக்கிழமை
காலை நிகழ்ச்சிகள்
மத்ரஸா மாணவர்களுக்கான சன்மார்க்க போட்டிகள் (அல்ஹதீத், அல்-அஸ்மாவுல் ஹுஸ்னா, இஸ்லாமிய பாடல், பாங்கு, கிராஅத், பேச்சுப் போட்டி) அஹ்மது நெய்னார் பள்ளியின் இமாம் அல்ஹாஜ் P.M.S. அபுல்ஹஸன் ஷாதுலி சூஃபி அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
மாலை நிகழ்ச்சிகள்
மாலையில் முஹ்யித்தீன் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி முதல்வர் திரு. ஸ்டீபன் M.Sc.,B.Ed., அவர்கள் முன்னிலையில்
QUIZ MARO 2015
Islamic & General Quiz Competition
with Computerised Multimedia
Audio & Video Special Features.
(ஆடியோ வீடியோ சுற்றுகளுக்கு கம்ப்யூட்டர் மல்ட்டிமீடியா வசதி பயன்படுத்தப்பட்டது)
இஸ்லாமிய பொது அறிவு வினாடி வினா போட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து மத்ரஸா மாணவர்கள் மற்றும் மத்ரஸாவின் பெண்கள் பிரிவான மஜ்லிசுன் நிஸ்வான் மாணவிகள் வழங்கிய இன்சுவை மார்க்க நிகழ்ச்சிகள் இடம் பெற்றது.
அதனைத் தொடர்ந்து மஹ்ழரா அரபிக்கல்லூரியின் பேராசிரியர் மௌலானா மௌலவி அஸ்ஃபர் ஆலிம் அஷ்ரஃபி அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.
பின்னர் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்;கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி இடம் பெற்றது.
பரிசளித்தவர்கள்
அல்ஹாஜ் P.S.M. இல்யாஸ் அவர்கள்
அல்ஹாஜ் P.M.S. அமீர் அப்துல்லாஹ் அவர்கள்
அல்ஹாஜ் S.I.. மீரான் அவர்கள்
அல்ஹாஜ் ஷெய்கு அப்துல்லாஹ் முத்துவாப்பா அவர்கள்
நன்றியுரை: ஜனாப் M.A. முஹம்மது தம்பி B.Sc., அவர்கள்
இரவு 10.30 மணியளவில், மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்க சபையின் ஆசிரியர் அல்ஹாஃபிழ் M. முஹம்மது ஹஸன் ஆலிம் ரஹீமி அவர்கள் ஃபாத்திஹா துஆ ஓதி நிகழ்ச்சிகளை நிறைவுபடுத்தினார்கள்.
அனைத்து நிகழ்ச்சிகளும் முஹ்யித்தீன் TV யில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் & படங்கள்:
‘மாஸ்டர் கம்ப்யூட்டர்’ முஹம்மத் அலீ
(ஆசிரியர் - MARO)
மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்க சபை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |