பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின.
நகரளிவான முடிவுகள் வருமாறு:
தேர்வு எழுதியோர்: 556
தேர்ச்சி பெற்றவர்கள்: 531
தேர்ச்சி சதவீதம்: 95.5
முதல் மதிப்பெண் (எல்.கே. மேல்நிலைப்பள்ளி):
1162 - எஸ். லட்சுமி நாராயணன்
தந்தை பெயர்: எல். சுப்பிரமணியம் (திருச்செந்தூர்)
இரண்டாம் மதிப்பெண் (சுபைதா மேல்நிலைப்பள்ளி):
1144 - கதீஜா ரில்வின் (சுபைதா மேல்நிலைப்பள்ளி)
தந்தை பெயர்: எம்.எஸ். அப்துல் ஹமீது (கிமு கச்சேரி தெரு)
மூன்றாம் மதிப்பெண் (சென்ட்ரல் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி):
1143 - எஸ்.ஏ.டி. ரஹ்மத் நிலோபார்
தந்தை பெயர்: எஸ்.எம். செய்து அபு தாஹிர் (குத்துக்கல் தெரு)
1000க்கு மேல் எடுத்த மாணவர் எண்ணிக்கை: 103
[Administrator: செய்தி திருத்தப்பட்டது @ 3:35 pm / 7.5.2015]
இந்த வருட பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வில் நகரளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர் எஸ். லட்சுமி நாராயணன் மற்றும் இரண்டாம் & மூன்றாம் இடங்களை பெற்ற அருமை சகோதரிகளுக்கும் எனது மனம் நிறைந்த பாராடுக்கள் உடன் கூடிய வாழ்த்துக்கள் ....
மேலும் முதல் மூன்று இடங்களை பெற முநைந்து அந்த இடங்களை பெற தவறிய மாணவ மாணவி கண்மணிகளுக்கும் , தேர்வில் வெற்றி பெற்ற அணைத்து மாணவ , மாணவி கண்மணிகள் அனைவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள் ....
இந்த தேர்வில் வெற்றி வாய்ப்பை இழந்த மாணவ . மாணவி கண்மணிகள் .. மனம் தளர விடாமல் மீண்டும் வெற்றி கனியை பறிக்க நீங்கள் முயர்ச்சி செய்யுங்கள் .... உங்களுக்கும் விரைவில் வெற்றி நிச்சயம் கிடைக்கும் .. வல்ல நாயன் உங்களையும் அந்த வெற்றி பெற்ற கூட்டத்தில் இணைய செய்வானாக . ஆமீன் .......
2. Re:...மக்கி ஆலிம் நினைவு பரிசு 2015 posted bymackie noohuthambi (kayalpatnam)[07 May 2015] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 40436
வாழ்த்துக்கள். வெற்றிபெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள். வெற்றிக்கு முயன்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
தேர்வின் முடிவு வாழ்வின் முடிவை நிச்சயிக்கும் அளவுகோல் அல்ல.,
அது வாழ்வின் திருப்புமுனைக்கு ஒரு தூண்டுகோல். அவ்வளவுதான்.
கடந்த ஆண்டுகள் போல் இவ்வருடமும் எங்கள் நெஞ்சமெல்லாம் நிறைந்து வாழும் எங்கள் அன்பு தந்தை ஹாஜி முஹம்மது மக்கி ஆலிம் அவர்கள் நினைவாக இந்த ஆண்டும் +2 அரசு தேர்வில் ஊரிலேயே அதிக மதிப்பெண்கள் பெற்று முதலாம் இரண்டாம் இடத்தை தக்கவைத்து வெற்றி வாகை சூடியவர்களுக்கு மக்கி ஆலிம் நினைவு பரிசு 2015 வழங்கி கௌரவிக்க முடிவு செய்துள்ளோம். வழக்கம் போல் எங்கள் இல்லத்துக்கு அவர்களை அழைத்து அந்த பரிசினை அளிக்கவும் முடிவு செய்துள்ளோம். பரிசு வழங்கும் நாள் வெகு விரைவில் அறிவிக்கப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
நீ எழுந்து நடந்தால் எரி மலையும் உனக்கு வழி கொடுக்கும்.
நீ விழுந்து கிடந்தால் சிலந்தி வலையும் உன்னை சிறை பிடிக்கும்
3. மாஷா அல்ல்லாஹ் மப்ரூக் வாழ்த்துக்கள் posted bySHEIKH ABDUL QADER (RIYADH)[07 May 2015] IP: 5.*.*.* | Comment Reference Number: 40438
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.
இறைவன் வழங்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக .
இறைவன் மிகப்பெரியன்.
இறையருள் நிறைக.
ஓரளவு மதிப்பெண்கள் பெற்று வெற்றிகண்டவர்களுக்குமெல் ஊரளவில் முதல்மூன்றிடங்க்களை தக்கவைத்துகொண்ட உங்களை வாழ்த்திப்பிரார்த்திக்கிறோம் ஆமீன் அப்படியேஆகட்டும் .
உங்களுக்குத்தான் தெரியும் இவ்வெற்றியையெட்ட நீங்கள் எவ்வளவு ஈடுபாட்டுடன் முயன்றிருப்பீர்களென்று இன்னும் உங்களைச்சுற்றி குடும்பத்தினர் கல்விக்கூடக்குடும்பத்தினர் அனைவரும் எவ்வளவு ஊக்கம்தந்து இந்நிலைக்கு கொண்டுவந்து இன்னும் வாழ்த்தி ஊக்குவித்துக்கொண்டிருப்பார்கள்.
4. Re:...assalamu alaikum. posted byS.H.SEYED IBRAHIM (RIYADH - K.S.A.)[07 May 2015] IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40442
"அஸ்ஸலாமு அலைக்கும்."
கோடான கோடி வாழ்த்துக்களும் & பாராட்டுகளும்!!! இந்த வருட பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வில் நகரளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர் எஸ். லட்சுமி நாராயணன் மற்றும் இரண்டாம் & மூன்றாம் இடங்களை பெற்ற அருமை சகோதரிகளுக்கும் எனது மனம் நிறைந்த பாராடுக்கள் உடன் கூடிய வாழ்த்துக்கள் ....
இந்த தேர்வில் வெற்றி வாய்ப்பை இழந்த மாணவ . மாணவி கண்மணிகள் .. மனம் தளர விடாமல் மீண்டும் வெற்றி கனியை பறிக்க நீங்கள் முயர்ச்சி செய்யுங்கள் .... உங்களுக்கும் விரைவில் வெற்றி நிச்சயம் கிடைக்கும் .. வல்ல நாயன் உங்களையும் அந்த வெற்றி பெற்ற கூட்டத்தில் இணைய செய்வானாக . ஆமீன் ......
அன்புடன் வாழ்த்தும் உள்ளம்,
சூப்பர் இப்ராகிம். எஸ். எச். + குடும்பத்தினர்,
ரியாத். சவுதி அரேபியா.
5. வெற்றிக்கனி உன் வரல் இடை தூரமே!.. posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu)[07 May 2015] IP: 128.*.*.* Romania | Comment Reference Number: 40443
முதலிடத்தையும்,முதன்மையை நெருங்கிய இடத்தையும் பிடித்து வெற்றிபெற்ற அனைத்து மாணாக்களுக்கும் இந்த
ஆதம் சுல்தானின் நல் வாழ்த்துக்கள்!
எந்த ஒரு போட்டியென்று வந்தாலே முதலிடம், இரண்டாமிடம் கடையிடம் என்ற சித்தாந்தத்தில் தான் இந்த உலகம் சுழல்கிறது. பலபேர் பங்கெடுத்து போட்டிபோட்டு முன்னெடுத்து முயலும் எந்த போட்டியிலும் எல்லோரும் ஒரே நேரத்தில் முதல் இடத்தைப்பிடித்து ஒரு சேர வெற்றிபெற்றார்கள் என்ற உலக அதிசய நிகழ்வை.இதுவரை கேள்விபட்டதில்லை! ஆகவே,
வெற்றிக்கு முயற்சித்து அது சற்றே கைநழுவி போன மாணவ மணிகளே,உங்கள் வெற்றி வேண்டுமானால் கைநழுவி போகலாம் ஆனால் காலம் உங்கள் முன்னால் இருக்கிறது, இடறிவிழுந்த நீங்கள் எழுந்திருங்கள்,இடுப்பை தட்டிவிட்டு தளராமல் ஓடுங்கள்,ஓடுங்கள் உங்கள் வெற்றி இலக்கு உங்களுக்கு முன்னால் கணபொழுதில் கிடைத்து விடும்!
கலங்க வேண்டாம், கண்ணீர் வேண்டாம் கடந்த கால மதிப்பெண்ணைவிட கூடுதல் கிடைப்பதற்கு இது ஒரு வாய்ப்பாக எண்ணி விடுங்கள்!
இவ் உலகம் மெச்சும் எத்தனையோ மேதாவிகள், மேன்மைதங்கிய தலைவர்களின் பலபேர் தங்கள் கல்வித்தேர்வில் தோல்விகண்டவர்கள் தான்.துவளவில்லை திரும்பவும் முயற்சித்தார்கள், வெற்றிபெற்றார்கள்.இந்த உலகம் பாராட்டும் உன்னதமானவர்களாக மாறினார்கள்.அவர்கள்
வரிசையில் நீங்களும் ஏன் வரக்கூடாது?
மாணவ மணியே நன்றே நினைத்திடுக, இன்றே புறப்பட்டு
விடாமுயற்சியுடன் வீறுகொண்டு இறங்கு உன் உழைப்பின் விளிம்பில் உன் வெற்றிகனி தெரிகிறது, உன் விரலிடை தூரம்தான் பாய்ந்து சென்று பறித்திடு! படைத்த இறைவனும்
உனக்கு துணைபுரிவான்! அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
7. Re:... posted bynizam (india)[07 May 2015] IP: 115.*.*.* India | Comment Reference Number: 40458
உண்மையில் காயலில் படித்த மாணவர்கள் டபுள் சாதனையாளர்கள். முதல் சாதனை ஒரு வருடத்தில் படித்தது. இரடண்டாவது சாதனை இந்த வருடம் சில பள்ளிகளில் நடந்த வாட்சாப் பிலச்போர்ட் தில்லிஉமுல்லுகல் செய்தது இல்லாமல் தனது உழைப்பு திறமை இறை அச்சம் கொண்டு பரீட்சை எழுதி மார்க் எடுத்தது. எனது சிறிய அட்வைஸ் அவர் சொல்லுகிறார் இவர சொல்லுகிறார் என்றில்லாமல் தாங்கள் எடுத்து மார்க்குக்கு ஏற்ப பிடித்த படிப்பை வீட்டின் பொருளாதார சூழ்நிலைகேற்ப எடுத்தல் உங்கள் பெற்றோர் மனம் குளிரும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross