Re:...குமாரசாமியும் சுப்ரமணியசாமியும் posted bymackie noohuthambi (kayalpatnam)[14 May 2015] IP: 180.*.*.* India | Comment Reference Number: 40583
MEN MAY COME AND MEN MAY GO BUT I GO FOR EVER.
திமுக தலைவர் கலைஞர் இந்த மிரட்டல்களுக்கும் கட்சி மாறல்களுக் கும் அஞ்சியவர் அல்ல .அவர் குடும்பம் ''கழகம்'' என்றிருந்தது மாறி, ''தன் குடும்பமே கழகம்'' என்ற மனோநிலைக்கு தள்ளப் பட்டிருப்பது என்னவோ உண்மைதான்.
குடும்பம் மனைவி மக்கள் பாசம் என்று இருப்பவர்களுக்கு இந்த மாதிரி சபலங்கள் ஏற்படுவது இயற்கைதான். கலைஞரும் ஒரு சராசரி மனிதர் தான். அவரது பலவீனமும் அதுதான்
காமராஜர், அண்ணா, MGR , ஜெயலலிதா இவர்கள் யாருக்கும் இந்த குடும்பம் மக்கள் பேரன் பேத்தி என்ற நெருக்கடிகள் இல்லை.
ஆனாலும் கழகத்தின் தலைவராக அவர் பொறுப்பேற்ற நாள் முதல் அவர் இழந்த பெரும் இழப்பு MGR தான். அதற்குப்
பிறகு படிப்படியாக அவர் இழப்பதற்கு ஒன்றுமில்லை என்று சொல்லும் அளவுக்கு கழகத்தின் முக்கிய தலைவர்கள் எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக வெளியேறினார்கள்.
எனவே இப்போது அனிதா ராதாக்ருஷ்ணன் கருப்பசாமி அணி மாறுவது ஒன்றும் அவருக்கு அதிர்ச்சி தரும் செய்தி அல்ல. பத்தோடு பதினொன்று அத்தோடு இது ஒன்று.போனால் போகட்டும் போடா இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா என்று பாடி விட்டு பூ என்று ஊதிவிட்டு போய் விடுவார்.
அவருக்கு இப்போது உள்ள மன உளைச்சல் எல்லாம், நீதிபதி குமாரசாமி இப்படி செய்துவிட்டாரே, எல்லாவற்றையும் நீர்த்து போக செய்து விட்டாரே என்ற கவலைதான்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross