செய்தி: இ.யூ.முஸ்லிம் லீக் சார்பில் வார்டு வாரியாக கொடியேற்றி, வார்டு நிர்வாகிகள் அறிமுகம்! கட்சியினர், பொதுமக்கள் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
நகரின் அனைத்து வார்டுகளுக்கும் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வார்டு நிர்வாகிகள் வார்டு வாரியாக அறிமுகம் செய்யப்பட்டு , அனைத்து வார்டுகளிலும் கட்சிக் கொடியும் ஏற்றப்பட்டுள்ளது அறிய மிக்க மகிழ்ச்சி.
------------------------------------
உறங்கிக் கொண்டிருந்தது போதும் இனி விழித்தெழவேண்டும் என்ற எண்ணம் நம் சமுதாய மக்களிடம் ஏற்பட்டுள்ளதை உணர முடிகிறது.
இன்றைய கால சூழலும், அரசியல் மாற்றங்களும் நம்மை ஒரு குடையின் கீழ் நின்று செயலாற்ற வலியுறுத்துகிறது – வல்ல அல்லாஹ்! நம்மை ஒன்றினைப்பானாக! ஆமீன்.
------------------------------------------
உறங்கிக் கொண்டிருந்த குழந்தை விழித்தவுடன் அதற்கு உஷார் தன்மை அதிகமிருக்காது – அது சுயநினைவை பெற சற்றுநேரமாகும். குழந்தை அதிகநேரம் உறங்கியிருந்தால் அல்லது மிக குறைவாக உறங்கியிருந்தால் சுயநினைவு வர சற்றுஅதிக நேரம் எடுக்கும். இதை நாம் தமாஷாக சொல்லுவோம் பேட்டரி இன்னும் சார்ஜ் ஆகவில்லை உஷார் வர இன்னும் நேரம் பிடிக்கும் என்று.
அதுபோல் இவ்வளவு நாட்களாக உறங்கிக் கொண்டிருந்த அல்லது சமுதாய மக்களால் உறங்கவிடப்பட்ட நம் சமுதாய கட்சி இன்று அல்லாஹ்! உதவியால் விழிக்கத் தொடங்கி இருக்கிறது.
இப்பொழுதுதானே! விழிக்கிறது – அதனால் சுயஉணர்வு / உஷார் தன்மை வர கொஞ்சக்காலமாகும். அதன் காரணமே வார்டுகளில் நடைபெற்றக் கொடியேற்றத்தில் அதிக மக்கள் தென்படவில்லை.
மேலும் இது பொதுக்கூட்டமோ அல்லது ஒன்றிரண்டு வார்டுகளிலோ ஏற்றப்படுகிற கொடியேற்று விழாவோ அல்ல அதிகமான மக்கள் வருவதற்கு – நகரின் எல்லா வார்டுகளிலும் அடுத்தடுத்து தொடராக கொடியேற்றப்பட்டதால் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.
---------------------------------------------
சமுதாய மக்கள் விருப்பு, வெறுப்புகளை மறந்து வேறு, வேறு அரசியல் கட்சிகளில் அதன் பொறுப்புகளில் இருந்தாலும் சமுதாய முன்னேற்றத்தையும், தங்கள் வாரிசுகளின் வருங்கால வாழ்வையும் – இன்றைய அரசுகள், காலசூழல்களை மனதில் கொண்டு தங்களாலான உதவிகளை சமுதாய கட்சிக்கு வழங்கிட வேண்டுகிறேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross