Re:... posted byvilack sma (jeddah)[21 May 2015] IP: 5.*.*.* | Comment Reference Number: 40663
குப்பை தேங்கி கிடக்கிறது எனபது அந்தந்த வார்டு உறுப்பினர்களின் சுறுசுறுப்பை காட்டுகிறது .
திருமண விருந்துகளின்போது ஏற்படும் குப்பைகள்பற்றி நான் முன்பு ஒரு கருத்துபதிவில் எழுதி இருந்தேன் . திருமண வீட்டாருக்கு நகரின் சுகாதாரம் , சுத்தம் போன்றவற்றில் அக்கறை இல்லை என்றுதான் கூற வேண்டும் . பல லட்சங்கள் செலவு செய்து விருந்து வைப்பார்கள் . விருந்து முடிந்தபின் சில நூறு ரூபாய்கள் கொடுத்து அந்த இடத்தை சுத்தம் செய்வோமே என்ற மனப்பான்மை ஒருவருக்கும் இல்லை .
நகராட்சியும் , விருந்து நடக்கும் பள்ளிவாசல்கள் மற்றும் திருமண மண்டபங்கள் இதற்கு தீர்வு காணலாம் . நகராட்சி விருந்து நடக்கும் இடத்திற்கு வரி விதித்து அந்த இடத்தை சுத்தம் செய்யலாம் . அல்லது பள்ளிவாசல்கள் , திருமண மண்டபங்கள் தாங்கள் நிர்ணயிக்கும் வாடகை தவிர சுத்தம் செய்வதற்கும் தனியாக ஒரு தொகை நிர்ணயித்து வசூல் செய்யலாம் . ஏனெனில் திருமண வீட்டுகாரர்கள் இந்த வேலையை செய்ய மாட்டார்கள் . தங்கள் வேலை முடிந்ததும் வெளியேறவே செய்வார்கள் .
சுத்தம் சோறு போடும் , குழம்பு ஊத்தும் போன்ற பொன்மொழிகளை சொல்லிகொண்டிருப்பதில் அர்த்தமே இல்லை .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross