உள்ளத்தூய்மையின் பிம்பமே ஊர்தூயமை!.. posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu)[21 May 2015] IP: 128.*.*.* Romania | Comment Reference Number: 40665
பரிமார் தெருவில் காணும் காட்சி,கல்யாண வீட்டின் கழிவுகளல்ல, என்றென்றும் காணக்கூடிய கண்காட்சியாகும்!
10-வது வார்டு உறுப்பினர்தான் ஓரளவு உண்மையான உதவி எண்ணத்துடன் உழன்று வருவதாக் கேள்விபட்டேன்
இப்போ அவரும் ஐய்க்கியமாகி விட்டாரா? ஹைர்!
அம்மாவை அட்டகாசமாக ஆட்காட்டி விரல்காட்டி வீர வசனம் பேசி வார்த்தைகள் கொட்டிய வீராதி வீரர், தன் பகுதி வார்டின் அவலத்தையும் அகற்ற வேண்டுமல்லவா? அதுதானே வீரத்தனம்,உண்மைத்தனம் வேறெவருக்கும் விலைபோகா பொதுமைத்தனம்!
அடுத்து,அன்பு காயல் சகோதர சகோதிரிகளே இது நம்மூர், நம்தெரு நம் வீட்டருகேயுள்ள பகுதி.அதை சுத்தமுடன் வைக்கவேண்டியது நம் கடமை.அண்டை வீட்டுக்காரன், எதிர்வீட்டுக்காரன் எல்லாம் ஏனோதானோவென்று குப்பைகளை வீசுகிறானே என்று ஆதங்கப்பட்டு நாமும் அதே தவறை செய்யலாகாது! .
நாம் சரியாக செய்வோம்,செய்வோம் அதை பார்த்தாவது ஒருநாள் அவமானமடைந்து அவர் திருந்துவார்.எல்லோர் கைகளும் இணைந்தால் இமயத்தைக்கூட இலேசாக அசைக்கலாம் என்பது முன்னோர்களின் முதுமொழி. தெண்டித்திடுவொம்-தூய்மை நகரமாய் திகழ்ந்திடச்செய்வோம்! அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்! .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross