நகராட்சி ஊழியர்கள் வேலையை கவனமாக செய்பவர்களாக இருந்திருந்தால் இத்தனை குப்பைகள் தேங்கிக் கிடக்க வாய்ப்பே இல்லை – அவர்களின் கவனக்குறைவே இதற்கு காரணம் எனலாம்.
இல்லை இந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் எங்கே போய், யாரிடம் புகார் செய்யப்போகிறார்கள் என்ற தப்பாண எண்ணத்தில் தங்கள் கடமையை செய்ய மறுக்கின்றார்களா?
இந்த இடத்தில் ஏன் ஒரு குப்பைத் தொட்டியை வைக்ககூடாது ? அல்லது இதற்கு முன்பு ஒன்று இருந்திருந்தால் அது என்னவாயிற்று?
குப்பையை அள்ளிச் செல்கின்றவர்கள் மட்டுமல்ல அதை மேற்பார்வை செய்கின்ற சூப்பர்வைஸர் என்று ஒருவர் உண்டே! அவர் எங்கே? சென்றார் இத்தனை நாட்களாக?
சகோதரர் விளக்கு எஸ்.எம்.ஏ. அவர்கள் குறிப்பிட்டிருக்கும் கருத்து மிகவும் வரவேற்கத்தக்கது.
கல்யாணம் மற்றும் விசேஷங்களில் தடபுடலாக விருந்து வைப்பவர்கள் எதுவும் கெளரவக் குறைவு வந்துவிடக்கூடாது – அதிகமாகவே ஆக்குங்கள் (சமையுங்கள்) என்று ஆக்கி சட்டிக் கணக்கில் மிஞ்சிப்போகும் - அதை அங்கே கொடு, இங்கே கொடு என்று கொடுத்துவிடுவார்கள் – அதுவும் இரவில் மிஞ்சிப்போனால் பெரும்பாலும் மண்ணில் புதைக்கப்படுகிற காட்சிகளை காணலாம்.
இப்படி கெளரவம் பார்த்து பல ஆயிரக்கணக்கில் வீணாக கொட்ட மனம் வரும் – அதே நேரத்தில் சுத்தம், சுகாதாரம் பேணுவதற்காக சில நூறு ரூபாய்களை செலவு செய்து அந்த இடத்தை சுத்தம் செய்ய மனம் இருக்காது.
இதற்கெல்லாம் காரணம் மார்க்கப்பற்று குறைவதும் – ஹராமான பணம் புழங்குவதும்தான்.
------------------------------------------------
தெருக்களில் கல்யாணப்பந்தல் போட்டால் நகராட்சியிலிருந்து உடனே வந்து, வரி வசூல் செய்வார்கள் – அது என்ன கணக்கு , எவ்வளவு பணம் – ஒரே பந்தலுக்கு ஒரு முறை வசூலா? இல்லை பல முறை வசூலா?. அது யாருக்கும் தெரியாது! என்னைப்போல் அனுபவப்பட்டவர்களுக்கே தெரியும் - அதற்கு வக்காலத்து வாங்க இன்னால்/முன்னால் கவுன்ஸிலர் வேறு வருவார் – அதிலெல்லாம் எல்லோரும் ஒற்றுமையாக இருப்பார்கள். மக்களுக்கு சேவை செய்வதில்தான் எதிரும் புதிருமாவார்கள்.
நகராட்சியில் நல்ல நிர்வாகம் நடந்தால் எவ்வளவோ செய்யலாம்
பந்தல் வரி வசூல் செய்யும்போதே! துப்பரவு பணிக்கும் சேர்த்து அட்வான்ஸாக வசூல் செய்து கொள்ளலாம்.
வீட்டுக்காரர்கள் அந்த இடத்தை சுத்தம் செய்திருந்தால் பணம் திரும்பக் கொடுத்துவிடலாம் – சுத்தம் செய்யாதிருந்தால் நகராட்சியே அந்த இடத்தை சுத்தம் செய்து விட்டு அந்த பணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று திட்டம் தீட்டி முறையாக ரஷீது கொடுத்து சேவையாற்றலாம். இதை நமது நகராட்சி செய்யுமா?.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross